தமிழில் சின்னத்திரையில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் அர்ச்சனாவும் ஒருவர். இவர் சின்னத்திரையில் நடித்ததன் மூலமாக ஓரளவுக்கு பிரபலமானார். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவிலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன.
தமிழ் சினிமாவில் பெரிய கதாபாத்திரங்கள் எல்லாம் எடுத்து நடிக்கவில்லை என்றாலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் இவர் நடித்திருக்கிறார். சத்யராஜ் நடித்த ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படத்தில் மூலம் இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார்.
இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்பதால் இவருக்கு அந்த திரைப்படம் அறிமுக படமாக இருந்தும் வரவேற்பை பெற்று தரவில்லை. தொடர்ந்து வாலு திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை கதாபாத்திரமாக இவர் நடித்திருப்பார்.
சின்ன கதாபாத்திரம்:
தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளும் வரவேற்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. ஏனெனில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்குதான் ஆட்கள் அதிகமாக கிடைப்பது கிடையாது.
இந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு சீரியல் நடிகைகளையே அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு ஏற்கனவே நடிக்க தெரிந்திருப்பதால் அவர்களுக்கு புதிதாக ஒன்றும் கற்றுத் தரத் தேவையில்லை.
இதனால் இயக்குனர்களுக்கும் சீரியல் நடிகைகளை நடிக்க வைப்பது சிரமம் இல்லாத விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில் சின்ன திரையில் பிரபலமான பிறகு இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சர்ச்சை படம்:
பெரும்பாலும் நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் அதற்குப் பிறகு அவர்களது நடிப்பு வாழ்க்கையை நிறுத்தி கொள்வார்கள். பெரிய பெரிய நடிகைகளை அப்படி செய்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் அர்ச்சனாவை பொறுத்தவரை அவர் தொடர்ந்து நடித்துதான் வருகிறார்.
நிறைய சீரியல்களில் நடித்தது மட்டும் அன்றி விளம்பரங்களிலும் நடித்து கொடுக்கிறார் அர்ச்சனா. ஏனெனில் விளம்பரங்களில் சினிமாவை காட்டிலும் அதிகமாக காசு கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. இப்போது சமூக வலைத்தளங்களில் இவர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அவற்றில் சில புகைப்படங்கள் அதிக கவர்ச்சியாக இருப்பதாகவும் பேச்சுக்கள் உண்டு. தற்சமயம் இவர் பேட்டியில் கலந்து கொண்ட பொழுது தன்னுடைய மோசமான அனுபவம் ஒன்றை கூறியிருந்தார் மணமகன் தேவை என்ற படத்தில் அவர் நடித்த போது நடந்த நிகழ்வு ஒன்றை கூறியிருந்தார்.
அந்த படத்தின் கதையை சொல்லும்பொழுது என்னுடைய கதாபாத்திரத்தை ஒரு மாதிரி சொன்னார்கள். ஆனால் படத்தை எடுக்கும் போது அந்த கதாபாத்திரம் வேறு மாதிரியாக இருந்தது. இந்த நிலையில் அந்த படத்தின் போஸ்டரை பார்த்துவிட்டு என் மகன் அம்மா நீதானா அது என்று என்னிடம் கேட்டான்.
அந்த சமயத்தில் அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. அப்போதே அந்த படம் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் இந்த பிரச்சனையை பெரிதுபடுத்தினால் நீங்கள் விளம்பரம் தேடுவதற்காக இதை செய்தது போல் ஆகிவிடும்.
எனவே கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள் என்று கூறிவிட்டனர் தயாரிப்பு நிறுவனத்தினர். அந்த படத்தில் நடித்தது குறித்து எப்பொழுதும் வெட்கப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார் அர்ச்சனா.