நடிகர் அர்ஜுன்-ன் இரண்டாவது மகள் அஞ்சனா அர்ஜுனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன் தற்போது குணச்சித்திர வேடங்களில் மற்றும் வில்லன் வேடங்களில் கூட நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை என்ற திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. இந்த படத்தில் வில்லனாக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பணத்தை கொள்ளையடிக்கும் திருடனாக நடித்திருந்தார் நடிகர் அர்ஜுன்.
இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க இயக்குனர்கள் அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் நடிகர் விஜயின் 67 வது படமான புதிய படத்தில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்க அணுகியிருக்கிறார்கள்.
முதலில் நடிகர் விஷாலிடம் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் படி கேட்துள்ளனர். ஆனால், நடிகர் விஷால் நடிகர் விஜய்யுடன் நடிக்க ஆவலாக இருந்த போதும் கூட அவர் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கும் படங்களில் நடிக்கவேண்டும் கால்ஷீட் இல்லை என்ற பிரச்சினை காரணமாக அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து நடிகர் அர்ஜுன் நடிகர் விஜய்க்கு வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார். இது குறித்து இன்னொரு பதிவில் விரிவாக பார்க்கலாம் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன் ஆனால் அவர் தேர்வு செய்த கதைகள் அனைத்துமே ஒரே மாதிரியாக இருந்த காரணத்தினால் அவருடைய படங்களை பார்க்க ரசிகர்கள் மத்தியில் சலிப்பு தட்ட ஆரம்பித்தது.
இதனை நடிகர் அர்ஜுன் ஒரு பேட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒரே மாதிரியான படங்களை தேர்வு செய்து நடித்து விட்டேன். அந்த காலங்கள் போய் விட்டது. இப்போது திரும்ப கேட்டாலும் கிடைக்காது என்று பேசியிருந்தார்.
சமீபத்தில் தெலுங்கு நடிகர் ஒருவரை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க திட்டமிட்டிருந்த நடிகர் அர்ஜுன் அந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகளை எல்லாம் செய்துவிட்டு அந்த படத்தை டிராப் செய்தார். காரணம் அந்த படத்தின் ஹீரோ அதனிடம் கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று வற்புறுத்துகிறார்.
அவர் கூறும் ஒரு மாற்றத்தை செய்தால் நான் ஏற்கனவே வைத்திருக்கக்கூடிய கதையில் பல மாற்றங்களை செய்ய வேண்டும். அதை அவர் புரிந்து கொள்வதாக இல்லை. எனவே இந்த படத்தில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன். 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் கூட இனிமேலும் அவருடைய படத்தை நான் இயக்க மாட்டேன் என்று பேசியிருக்கிறார்.
இந்நிலையில், இவருடைய இரண்டாவது மகள் அஞ்சனா அர்ஜூனின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகர் அர்ஜூனின் மகள் என்று வாயடைத்துப்போய் கிடக்கின்றனர்.