இது கல்யாணமா..? இல்ல சரக்கு பார்ட்டியா..? அர்ஜுன் மகளுடன் மது ஊற்றி கொண்டாடும் தம்பி ராமையா மகன்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அர்ஜுன். பெரும்பாலும் அர்ஜுன் நடிக்கும் திரைப்படங்கள் சண்டை காட்சிகள் அதிகம் கொண்ட திரைப்படங்களாகதான் இருக்கும்.

நடிகர் அர்ஜுன் புரூஸ்லீயின் மிகப்பெரும் ரசிகராக இருந்த காரணத்தினால் அவரது திரைப்படத்தில் அந்த தாக்கங்களை பார்க்க முடியும். பெரும்பாலும் நடிக்கும் சண்டை காட்சிகளில் புரூஸ்லீ போலதான் நடிப்பார் அர்ஜுன். மேலும் தொடர்ந்து சண்டை காட்சிகள் மீது அதிக ஆர்வம் செலுத்தி வந்தார் அர்ஜுன்.

அதன் மூலம்தான் அவருக்கு ஆக்ஷன் கிங் என்கிற பெயர் வந்தது. பிறகு அர்ஜுனுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய துவங்கியது. அதற்கு பிறகு துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கிய அர்ஜுன் இப்பொழுது நடித்து வரும் திரைப்படங்களில் எல்லாம் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அர்ஜுனுக்கு கம் பேக்:

மங்காத்தா திரைப்படம் அர்ஜுனுக்கு ஒரு கம் பேக்காக இருந்தது. அதனை தொடர்ந்து ஹீரோ, இரும்புக்குதிரை போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார் சமீபத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்திருந்தார்.

ஆனாலும் கூட அந்த திரைப்படத்தில் அர்ஜுனுக்கு பெரிதாக கதாபாத்திரம் கொடுக்கவில்லை என்று அதை ஒரு குறையாக கூறி வந்திருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமையாவின் மகனான உமாபதிக்கும் திருமணம் நடந்தது.

கடந்த பத்தாம் தேதி நடந்த இந்த திருமணம் பெரிதாக பேசப்பட்ட ஒரு விஷயமாக இருந்தது. ஐஸ்வர்யா தமிழில் பட்டத்து யானை என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார்.

திருமண வரவேற்பு:

அதற்கு பிறகு சினிமாவில் பெரிதாக இவருக்கு வரவேற்பு என்பது இல்லை இதனை தொடர்ந்து இவருக்கும் தம்பி ராமையாவின் மகனுக்கும் இடையே காதல் ஏற்பட்டதை அடுத்து சமீபத்தில் இவர்கள் திருமணம் நடந்தது.

திருமணத்தை பொருத்தவரை அதை மிகவும் சிம்பிளாக அர்ஜுன் கட்டியிருந்த ஆஞ்சநேயர் கோயிலிலேயே நடத்திவிட்டனர். ஆனால் வரவேற்பை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டனர். ஏனெனில் சினிமா பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் அந்த வரவேற்பு இருக்க வேண்டும் என்று கருதினார் அர்ஜுன்.

அந்த வகையில் கடந்த 14ஆம் தேதி லீலா பேலஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் அனைவருக்கும் மது விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது மேலும் அந்த விழாவில் மணமகன் மணமகள் இருவருமே நடனமாடி கொண்டாடி இருக்கின்றனர் தற்சமயம் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் சிலர் இதற்கு  எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மது அருந்திவிட்டு வரவேற்பில் நடனமாடுவது சரியா என்பதே அவர்களது கேள்வியாக இருந்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version