தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே பிரபலமாக இருந்து வருபவர் நடிகர் அர்ஜுன். மிக இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் இவர் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து அர்ஜுனுக்கு தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு இடம் கிடைத்தது.
மேலும் சண்டை காட்சிகளை சிறப்பாக செய்யக்கூடியவராக அஜித் இருக்கிறார். பெரும்பாலும் அவரது சண்டை காட்சிகளில் நடிகர் புரூஸ்லீயின் சாயலை பார்க்க முடியும். நடிகர் புரூஸ்லீயின் தீவிர ரசிகரான அர்ஜுன் தொடர்ந்து அவரது சண்டை முறைகளையே தமிழ் சினிமாவில் முயற்சி செய்து வந்தார்.
சண்டை காட்சிகள் மீது இவருக்கு இருக்கும் ஆர்வத்தை கண்டுதான் இவருக்கு ஆக்ஷன் கிங் என்கிற பெயர் வந்தது. அப்போது தொடங்கி இப்போது வரை தனது உடலை சரியாக மெயின்டைன் செய்து வருகிறார்.
அர்ஜுன் ரீ எண்ட்ரி:
வயதான பிறகு அர்ஜுனுக்கு துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. மங்காத்தா திரைப்படம் இவருக்கு மிகப்பெரும் ரீ என்ட்ரி ஆக இருந்தது அது. இத்தனைக்கும் மங்காத்தா திரைப்படத்தில் கிட்டத்தட்ட ஒரு வில்லன் கதாபாத்திரத்தில்தான் அர்ஜுன் நடித்திருப்பார்.
இருந்தாலும் கூட மாஸான ஒரு கதாபாத்திரமாக அது இருந்ததை அடுத்து தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்க துவங்கியது. அதனை தொடர்ந்து ஹீரோ, இரும்புத்திரை மாதிரியான திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றார் அர்ஜுன்.
இந்த திரைப்படங்களில் எல்லாம் பெரும் கதாநாயகர்களுக்கு அடுத்த கதாபாத்திரத்தில் அர்ஜுன்தான் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமையாவின் மகனுக்கும் திருமணம் நடந்தது.
மகள் திருமணம்:
இந்த திருமணம் அர்ஜுன் சொந்தமாக கட்டி இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் நடந்தது. அப்பொழுது நிறைய விஷயங்களை பத்திரிகையாளர்களிடம் பேசி இருந்தார் அர்ஜுன். அதில் பேசும் பொழுது தற்பொழுது அவர் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம் குறித்தும் பேசியிருந்தார்.
மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அஜித்துடன் மீண்டும் அர்ஜுன் இணைந்து நடிக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதா என்பதே பலருக்கும் கேள்விக்குறியாக இருந்தது.
மேலும் இந்த திரைப்படம் இந்த வருடம் திரைக்கு வருமா என்பதும் ஒரு கேள்வியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் இதுகுறித்து பேசிய அர்ஜுன் சீக்கிரத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்க இருக்கிறோம். இன்னும் 20 முதல் 30 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.