கடந்த மாதம் ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இது நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை எடுத்து வருகிறார்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு…
இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் ஆற்காடு சுரேஷின் தம்பியான பொண்ணை பாலு, பெண் தாதா மலர் கொடி, கஞ்சா விற்பனை செய்த அஞ்சலை ஹரிதரன் உள்ளடோர் கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் அதிமுக, திமுக, பாஜக, தாமாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனவே இந்த கொலை சம்பவம் தொடர்பாக கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அதிரடியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .
அதேபோல் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் பிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள்.
இயக்குனர் நெல்சன் மனைவிக்கு என்ன தொடர்பு ?
இப்படியான சமயத்தில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மும்முரமாக தேடப்பட்டு வந்த ரவுடி சம்போ செந்தில் கூட்டாளி மொட்டைகிருஷ்ணன் என்பவர் தன்னுடைய குடும்பத்தோடு வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டதாக தகவல் வெளியாகி மீண்டும் பரபரப்பை கிளப்பியது.
அதை எடுத்து மொட்டை கிருஷ்ணன் தற்போது சவுதி அரேபியாவில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியது.
எனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் அனைவரையும் பிடிக்க தமிழக போலீசார் தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள் .
இதனிடையே மொட்டை கிருஷ்ணன் சிங்கப்பூரில் 10 நாட்களாக தாக்கியிருப்பதாக தகவல் வெளியாகியது. பின்னர் அடுத்து அவரை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இப்படியாக இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் சமயத்தில் திரைப்பட துறையை சேர்ந்த இயக்குனர் நெல்சனின் மனைவியான மோனிஷா மொட்டை கிருஷ்ணனுடன் போனில் தொடர்புக்கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியது .
இதனால் நெல்சனின் மனைவிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாகவும் இதற்காக அவர் பல கோடி பணம் பெற்று இருப்பதாகவும் விதவிதமான செய்திகள் வெளியாகி மேலும் பரபரப்பு கிளப்பியது.
மொட்டை கிருஷ்ணனிடம் மோனிகா நெல்சன் பேசியது எதற்காக? என்ன காரணம்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பது குறித்து போலீசார் அவரிடம் துரித விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இயக்குனர் நெல்சன் பரபரப்பு பேச்சு…
நெல்சனிடமும் அவரது மனைவியிடமும் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியது. இது குறித்து பிரபல தொலைக்காட்சி நிறுவனம் இயக்குனர் நெல்சனிடம் போன் செய்து விசாரித்தபோது…
ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் என்னிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. விசாரணைக்கு ஆஜராகுமாறு தன்னுடைய வீட்டுக்கு வந்து தனக்கு போலீஸ் சம்மன் கொடுக்கவில்லை.
இதுவரை காவல்துறையினரிடமிருந்து என்னுடைய வாழ்நாளில் எந்த ஒரு தொலைபேசியோ அல்லது நேரிலோ அழைப்பு வந்தது இல்லை.
அவ்வளவு ஏன் காவல்துறையினரிடம் எந்த அதிகாரிடம் எனது இந்த விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்று கூட எனக்கு தெரியாது.
இது என்ன மேட்டர் என்று எனக்கே தெரியவில்லை எதற்கு என்னுடைய பெயர் எல்லாம் உள்ளே இழுக்கிறார்கள் என்பது கூட எனக்கு புரியல.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாங்கள் இவ்வளவு பணம் வாங்கினோம் என கூறுகிறார்கள். இதெல்லாம் புரியவே இல்ல.
சம்மந்தமே இல்லாமல் இந்த வழக்கில் என்னை ஏன் உள்ளே இழுத்து விடுறாங்க என்பது எனக்கு தெரியவே இல்லை என்று நெல்சன் பரபரப்பான தகவல் ஒன்றை கூறி விளக்கம் கொடுத்திருக்கிறார்.