உங்க பாடி எப்போதும் பிட் ஆக இருக்கணுமா? இதுக்கு அருகம்புல் சாறு குடிங்க ஆரோக்கியத்தை பெறுங்க…!!

இன்று இயற்கை மருந்தை பயன்படுத்தும் நிபுணர்கள் அனைவரும் இந்த அருகம்புல் சாறு பச்சை ரத்தம் என்று அழைத்து வருகிறார்கள்.

 இதற்குக் காரணம் இந்த அருகம்புல்ச் சாறு நமது உடலில் எடுத்துக் கொள்ளும் போது எண்ணற்ற மாற்றங்களை தந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது.

பச்சையாக அருகம்புல்லை பறித்து சாறெடுத்து குடிக்க முடியாதவர்களுக்கு இன்று அருகம்புல் பொடியாக பல கடைகளில் கிடைக்கிறது. அதை பயன்படுத்தியும் நீங்கள் அந்தப் பயனை அடைய முடியும்.

 பொடியாக பயன்படுத்துபவர்கள் ஒரு ஸ்பூன் பொடியினை போட்டு வெதுவெதுப்பான நீரில் அதை கலந்து குடிக்கலாம். பிரஷாக அருகம் புல் கிடைத்தவர்கள் ஒரு கைப்பிடி அளவு புல்லை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு மைய அடித்து அந்த சாறினை வடிகட்டி பருகலாம்.

அருகம்புல் சாறின் பயன்கள்

அற்புத இயற்கை மருந்தான இந்த அருகம்புல் சாறினை பருகுவதால் உடலில் இருக்கும் கழிவுகள் அனைத்தும் வெளியேறக்கூடிய தன்மையை ஏற்படுத்தும்.

இந்த அருகம்புல் சாரில் 17 வகையான அமினோ அமிலங்கள் இதற்கு உறுதுணையாக இருப்பதால் நச்சுக்களை நீக்குகின்ற பணி சிறப்பாக நடக்கும்.

 அது மட்டுமல்லாமல் இதில் அதிக அளவு இருக்கும் குளோரோபிலின் கிருமி நாசினியாக செயல்பட்டு உடலில் தேவையில்லாமல் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸுகளை அளிக்கும்.

மனித உடலுக்கு இயற்கை செரிமானத்தை தூண்டுகின்ற ஊக்கியாக செயல்படுகின்ற இந்த அருகம்புல் சாறு எத்தகைய உணவை நீங்கள் உட்கொண்டு இருந்தாலும் ஜீரண சக்தியை அதிகப்படுத்தி விரைவில் செரிமானத்தை தூண்டக்கூடிய வகையில் திகழும்.

 எனவே செரிமான பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் அருகம்புல் சாலை தினமும் பருகி வரலாம்.

 உடல் எடை தன்னை மிஞ்சி போட்டு விட்டது என்று கவலைப்படுபவர்கள் கட்டாயம் உங்கள் உணவில் அருகம்புல்சாரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பருகி வரலாம். அவ்வாறு பருகுவதின் மூலம் உங்களுக்கு எடை குறைவதோடு மட்டுமல்லாமல் தைராய்டு சுரபியின் செயல்பாட்டை ஊக்குவிக்க கூடிய திறன் மிக்கது.

 மேலும் இதில் செசிலியம் மற்றும் அத்யாவசிய தாதுக்கள் இருப்பதால் உடல் எடையை கணிசமாக குறைக்க உதவி செய்யும்.இது தேவையற்ற கொழுப்பு படிதலை தடுக்கக்கூடிய ஆற்றல் உள்ளதோடு மட்டுமல்லாமல் இதில் ஆண்டி ஆக்சைடுகள் மற்றும் விட்டமின் ஏ,சி ஆகியவை நிறைந்து காணப்படுவதால் தேவையற்ற கொழுப்புகளை குறைப்பதில் திறம்பட பணியாற்றுகிறது.

 உடலின் பீஹச் அளவை சமன்படுத்த கூடிய இந்த அருகம்புல் சாறு புற்றுநோய் செல்களை வளர்க்க விடாமல் தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டு இருப்பதால் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய ஆற்றல் மிக்கது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …