விஜயகுமாரின் முதல் மனைவி பற்றி வெளியான தகவல்.. போலீசில் நடிகர் அருண் விஜய் புகார்..

பழம்பெரும் நடிகரான விஜயகுமார் பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை. இவர் மிகச்சிறந்த ஹீரோவாகவும், குணசித்திர நடிகராகவும் நடித்து அனைவரது மனதிலும் இடம் கிடைத்தவர்.

இதையும் படிங்க: 300 படங்கள் நடிச்சிருக்கேன்.. இந்த ஒரு பழக்கம் என் வாழ்க்கையை நாசமாகிடுச்சு.. காஜா ஷெரீப் வேதனை

குறிப்பாக இவர் நடிப்பில் வெளி வந்த நாட்டாமை திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் விரும்பும் நடிகராக இன்று வரை திகழ்ந்து வருகிறார்.

நடிகர் அருண் விஜய்..

நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் நடிகை மஞ்சுளா. இவரது மூத்த மனைவியான முத்து கண்ணுவிற்கு பிறந்தவர் தான் அருண் விஜய் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

அருண் விஜய்யும் வாரிசு நடிகராக தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வந்த யானை திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டது.

மேலும் தற்போது பார்ட்னர் என்ற படத்தில் நடித்த முடித்து உள்ள இவர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வங்கான் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த வருகிறார்.

அம்மா பற்றிய அவதூறு பேச்சு..

இந்நிலையில் தற்போது அருண் விஜய் தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் தவறான கருத்துக்களை யூட்யூப் சேனல் ஒளிபரப்பி வருவதாக கூறி இருப்பது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இவரது சகோதரியின் மகளின் திருமணம் படு விமர்சையாக நடைபெற்ற நிலையில் அந்த நிகழ்வு குறித்த பல் வகையான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளி வந்து வைரலாக மாறியது.

போலீசில் புகார்..

இந்த திருமணம் முடிந்த நிலையில் தற்போது அருண் விஜய் தனது வழக்கறிஞர் மூலம் கமிஷனர் ஆபீஸில் புகார் இணைத்திருக்கிறார். இந்த புகாரில் தன்னை பற்றியும் தனது தந்தையின் முதல் மனைவி பற்றியும் அதாவது தன்னுடைய அம்மா பற்றி அவதூறான கருத்துக்களை youtube சேனல் ஒன்று பரப்பியதாக கூறியிருக்கிறார்.

இந்த காரணத்தால் இவர் மட்டுமல்லாமல் இவரது குடும்பத்தைச் சார்ந்த அனைவரும் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதோடு தவறான தகவல்களை வெளியிட்ட அந்த youtube சேனல் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்.

இதனை அடுத்து அந்த youtube சேனல் மீது சட்டப்படி என்ன நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதை இனி வரக்கூடிய நாட்களில் தான் தெரிய வரும்.

எனினும் ஊடகங்கள் பெயர் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக தவறான கருத்துக்களை பரப்புவதை தடை செய்ய வேண்டும். இல்லை என்றால் அப்படி பரப்பும் ஊடகங்களின் உரிமையை பறிப்பதோடு அந்த சேனல்களை முடக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதின் மூலம் அவர்களுக்கு தவறான தகவல்களை வெளியிடுவதற்கு முன்பு பயம் ஏற்படும். மேலும் நன்கு ஆய்ந்து அதன் பின்பு தான் தகவல்களை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் என்பதை ரசிகர்கள் பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து அருண் விஜய் இதற்காகத்தான்  கமிஷனர் ஆபீஸில் புகார் கொடுத்து இருக்கிறாரா? என்ற ரீதியில் ரசிகர்கள் அனைவரும் பேசி வருவதோடு இந்த விஷயத்தை அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வைரல் ஆக்கிவிட்டார்கள்.

இதையும் படிங்க: ப்பா.. எத்த தண்டி.. கீழ ஒண்ணுமே போடாமல் முழுசாக காட்டி.. கதற வைக்கும் 45 வயசு நடிகை..!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version