பட்டையை கிளப்பும் லுக்கில் வணங்கான் அருண்விஜய்..! புகைப்படம் இங்கே..!

வணங்கான் இத்திரைப்படத்தை 2டி நிறுவனம் தயாரித்தது இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து இருந்தார். ஆரம்பத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் கன்னியாகுமரியை சுற்றியுள்ள பகுதியில் படமாக்கப்பட்டது. 30 நாட்கள் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

இந்த சமயத்தில் சூர்யா தரப்பிற்கும் பாலாவிற்கு இடையே ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக அறிவித்தார். அதற்குபிறகு 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இதில் இருந்து விலகியது .

பாலா எப்பொழுதுமே வித்தியாசமான கதைக்களத்தில் படமாக்க கூடியவர். மேலும் இவருடைய டைரக்ஷனில் நடிக்க வேண்டும் என்றால் அந்த நடிகர் இவரது அடியும் தாங்க வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படும். என்னதான் பாலா நடிப்பை கற்றுக் கொடுத்தாலும் சூர்யா இப்பொழுது மிகப்பெரும் நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

பழைய சூர்யா ஆகவே நினைத்து பாலா தற்பொழுதும் நடந்து கொண்டுள்ளார். அதனாலேயே இந்த படம் பாதியில் நின்றது இதைத்தொடர்ந்து இந்த படத்தை பாலா யாரை வைத்து இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் அருண் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இப்பொழுது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது இந்த படத்தின் முதல் பாகத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி செட்டியை இந்த படத்திலும் ஜோடியாக நடிக்கிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹீரோயினும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

வணங்கான் திரைப்படத்தில் அருணுக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் என்ற இளம் நடிகை நடிக்கிறார். இவர் ஏற்கனவே ஜடா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்தப் படத்திற்கான ஒரு கெட்டப்பில் அருண் விஜய் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் அருண் விஜய் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது கூடுதல் தகவல். இதுபோல பல சினிமா செய்திகளை உடனுக்குடன் காண நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …