நடிகர் ஆர்யாவின் பிறந்தநாளன்று முத்தையா இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கக்கூடிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து ஆர்யாவின் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி கடலில் மிதந்து வருகிறார்கள்.
பொதுவாகவே கிராமத்து கதை அம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் சாமர்த்திய சாலியான இயக்குனர் முத்தையா சசிகுமார் நடிப்பில் வெளிவந்த குட்டிப்புலி படத்தை 2013 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்து இயக்குனராக அறிமுகமானார்.
இதனை அடுத்து இவர் கொம்பன், மருது, தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி என பல கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை எடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
கடைசியாக இவர் இயக்கிய படம் தான் விருமன் இதில் கார்த்தி கிராமத்தில் இளைஞனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சங்கர் மகள் அதிதி இந்த படத்தில் ஹீரோயினியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரன், வடிவுக்கரசி ,ஆர் கே சுரேஷ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே எந்த படத்தில் நடித்திருக்க இந்த படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்தது.
மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் திரட்டி வந்த விருமன் படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றதோடு சுமார் 60 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை சேர்ந்து பிளாக் பஸ் ஸ்டாண்ட் மூவியாக திகழ்ந்தது.
இந்த வெற்றிக்கு பின் இவர் ஆர்யாவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஆரியாவுக்கு ஜோடியாகத் சித்தி இத்தானி நடித்த வருகிறார். படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் ஆர்யாவின் பிறந்தநாளை ஒட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த படத்திற்கு காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் தொடை தெரிய லுங்கியை ஏத்தி கட்டிக்கொண்டு பக்க கிராமத்து இளைஞர் கெட்டப்பில் ஆர்யா இருக்கிறார்.