சந்தானம் முதுகில் குத்திய அந்த வாத்து யாரு..? ரசிகர்கள் விவாதம்..!

தமிழ் சினிமா என்பது பல நூறு, பல ஆயிரம் கோடிகள் புரளும் ஒரு மிகப்பெரிய கனவுத் தொழிற்சாலை இருக்கிறது. அங்கு எந்த அளவுக்கு பணப்புழக்கமும், புகழும், பெருமைகளும் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நிறைய மோசடிகளும், பித்தலாட்டங்களும், ஏமாற்று வேலைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

மோசடி உலகம்

ஏனெனில் அது போன்று மோசடி பேர்வழிகளால் தான் நிறைய பேர் தங்களது பட வாய்ப்புகளை இழக்கிறார்கள். கிடைக்க வேண்டிய வருமானத்தை இழக்கிறார்கள். பல கோடி பணத்தை நம்பி ஏமாறுகிறார்கள்.

தமிழ் சினிமா என்பது எப்படி வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு போலவே, தமிழ் சினிமாவும் நல்ல கலைஞர்களை, திறமையாளர்களை வாழ வைக்கிறது.

அதே நேரத்தில் நம்பியவர்களை ஏமாற்றும் மோசடி நபர்கள் நிறைந்த துறையாகவும் அது இருக்கத்தான் செய்கிறது.

சந்தானம், ஆர்யா

அதுவும் சந்தானம், ஆர்யா போன்ற பிரபல நடிகர்களுக்கே அதுபோன்ற கசப்பான் அனுபவங்கள் கிடைத்திருக்கிறது என்றால், சினிமாவில் நடிக்க அறிமுக நடிகனாக வாய்ப்பு தேடி செல்பவர்களையும், மற்றவர்களை நம்பி கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பாளர் நிலமையும் நினைத்துப் பார்த்தால் மிகப் பரிதாபமாக தான் இருக்கிறது.

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கொடிகட்டி பறக்கிறார். கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வெற்றி பெற்றிருக்கிறார்.

அதேபோல் நடிகர் ஆர்யாவும் ஒரு முன்னணி நடிகராக, தன்னை நிலை நிறுத்தி கொண்டவர். அசாத்திய திறமையால் முன்னுக்கு வந்தவர். இவர்கள் இருவருமே திரைத்துறை சார்ந்த நெருங்கிய நண்பர்களாக இருப்பதால், சில படங்களில் ஒன்றாகவும் இணைந்து நடித்துள்ளனர்.

மோசமான கசப்பான அனுபவம்

அந்த வகையில் தங்களுக்கு நேர்ந்த ஒரு மோசமான கசப்பான அனுபவம் குறித்து பொதுவெளியில் வெளிப்படையாகவே நடிகர் சந்தானம் பேசி இருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில், இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடன், பைனான்ஸ் வேண்டாம்

நடிகர் சந்தானம் சமீபத்திய மேடை நிகழ்ச்சி ஒன்றில், நானும் நடிகர் ஆர்யாவும் பல தயாரிப்பாளர்களிடம் கடன் பெற்று இருக்கிறோம். அனைவருக்குமே நாங்கள் கடன் பட்டவர்கள் தான். ஒரு கட்டத்தில் இனிமேல் இதுபோல கடன் வாங்க வேண்டாம்.பைனான்ஸ் போன்ற விஷயங்களுக்கு செல்ல வேண்டாம். நம் கையில் இருப்பதை வைத்து படம் எடுக்கலாம் என்று யோசித்தோம்.

தங்க முட்டையிடும் வாத்து

அப்போது ஆர்யா என்னை தொடர்பு கொண்டு, மச்சான் தங்க முட்டை போடும் வாத்து உன்னை கண்டுபிடித்து இருக்கிறேன். அவர்களை வைத்து நாம் படம் எடுக்கலாம் என்று கூறினான்.

ஆனால் நாட்கள் செல்லச் செல்லதான் எங்களுக்கு உண்மை புரிந்தது. அந்த வாத்து தங்க முட்டை போடவில்லை. எங்களுடைய பின்னாடி இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது.

யார் அந்த வாத்து

திரும்பிப் பார்த்தால் எங்களுடைய முட்டையை அந்த வாத்து பிடுங்கிக் கொண்டிருந்தது. நான் வாத்து என கூறியதுமே யார் அது என கண்டுபிடித்து இருப்பீர்கள் .

நாங்கள் அவருடைய பெயரை சொல்ல விரும்பவில்லை என பூடகமாக ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார் நடிகர் சந்தானம்.

எந்த அளவுக்கு வேதனைப்பட்டு இருந்தால் இந்த விஷயத்தை பொதுவெளியில் இவ்வளவு சோகமாக கூறுவார். அந்த வாத்து யாரு என்ற விவாதத்தை தற்போது ரசிகர்கள் கிளப்பி விட்டு இருக்கின்றனர்.

முதுகில் குத்தியது

அந்த வாத்து யாராக இருக்க கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என கீழே கமெண்ட் செய்யுங்கள்.

சந்தானம் முதுகில் குத்திய அந்த வாத்து யாரு என்று ரசிகர்கள் கடுமையாக விவாதம் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version