மேடையில் கதறும் தயாரிப்பாளர்.. மனைவியுடன் பீச்சில் கில்மா பண்ணும் நடிகர் அசோக் செல்வன்..!

சின்ன சின்ன திரைப்படங்களில் நடித்து தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக மாறியிருப்பவர் நடிகர் அசோக் செல்வன். சின்ன நடிகராக இருந்த அசோக்செல்வனுக்கு ஓ மை கடவுளே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

அந்த திரைப்படத்திற்கு பிறகு அசோக் செல்வனின் மார்க்கெட் என்பதே உயர்ந்துவிட்டது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வரும் அசோக் செல்வன் சமீபத்தில் நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அசோக் செல்வன் படம்:

இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் எமக்குத் தொழில் ரொமான்ஸ் என்கிற படம் விரைவில் திரையரங்கில் வர இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் அசோக் செல்வன் மட்டும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் அந்த விழாவில் கலந்து கொண்ட பிரபல சினிமா விநியோகஸ்தரான கே ராஜன் அசோக் செல்வன் குறித்து கடுமையாக பேசியிருந்தார். மேலும் படத்தின் தயாரிப்பாளரும் அசோக்செல்வனை வெளுத்து வாங்கி இருந்தார்.

அதில் கே ராஜன் கூறும் பொழுது அசோக் செல்வன் படப்பிடிப்புக்கு வரும் பொழுது 100 மீட்டருக்கு பௌன்சர்களை பக்கத்தில் வைத்திருக்கிறார். அவர் என்ன தீவிரவாதியா அவரை யாராவது சுட்டுவிடப் போகிறார்களா வந்து அதற்குள்ளாக இப்படி செய்வதெல்லாம் அநியாயமாக இருக்கிறது.

கிழித்தெடுத்த தயாரிப்பாளர்:

அதேபோல படத்தின் டப்பிங் வந்துவிட்டு மொத்த சம்பள காசையும் கொடுத்தால்தான் டப்பிங் பேசுவேன் என்று கூறுகிறார். அந்த காலத்தில் எல்லாம் நடிகர்கள் அவர்களது கை காசை கொடுத்து படத்தை முடிக்க சொன்னார்கள்.

ஆனால் இப்பொழுது மோசமாக மாறிவிட்டார்கள் நடிகர்கள் என்று பேசி இருந்தார். இதனை தொடர்ந்து இந்த பேச்சு அதிகமாக வைரல் ஆகி வந்தது. மேலும் இது குறித்து தயாரிப்பாளர் பேசும்போது நீங்க கல்யாணத்துக்கு அப்புறம் அம்மா அப்பாவுக்கு கார் வாங்கி கொடுக்கிற பணம் ஒரு தயாரிப்பாளரின் பணம் நாங்கள் தாலி வித்து கொடுத்த காசுதான் அது என்று பேசி இருந்தார்.

இவ்வளவு விஷயங்கள் நடந்த பொழுதும் கூட அது குறித்து எந்த ஒரு ரியாக்ஷனும் கொடுக்காத அசோக் செல்வன் தொடர்ந்து தனது மனைவியுடன் கடற்கரையில் உல்லாசமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு இந்த தயாரிப்பாளர்களை வெறுப்பேற்றி இருக்கிறார்.

தற்சமயம் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் திரைப்படத்திலும் அசோக் செல்வன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version