அந்த நாட்டுக்கு போனதால்.. தன் வாழ்க்கையை தொலைத்த நடிகை அசின்.!

தமிழ் சினிமாவில் நடித்துவரும் நடிகர் நடிகைகள் யாரேனும் சிலரது நடவடிக்கை சரியில்லாத பட்சத்தில், அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்கு அவர்கள் சினிமாவை விட்டு விலக்கி வைக்கப்படுவர்.

அதாவது கால்ஷீட் குளறுபடி, குறிப்பிட்ட தேதிகளை தந்துவிட்டு படப்பிடிப்புக்கு வராமல் இருப்பது, படப்பிடிப்பு தளத்தில் தேவையின்றி பிரச்சனைகள் செய்வது, தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களுடன் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபடுவது, வம்பு செய்வது, அநாகரீகமாக நடந்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடும் நடிகர்கள் யாரேனும் இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது வழக்கமாக உள்ளது.

ரெட் கார்டு

தென்னிந்திய நடிகர் சங்கம், திரைப்பட இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவை சார்பில் இப்படி குறிப்பிட்ட பிரச்னைக்குரிய நடிகர் அல்லது நடிகையின் மீது ரெட் கார்டு கொடுத்து விடுவது வழக்கம்.

அந்த வகையில் இதுவரை நடிகர்கள் சிம்பு, வடிவேலு, பாடகி சின்மயி, நடிகை தன்யா பாலகிருஷ்ணன், பிரபல நடிகை அசின் உள்ளிட்டோருக்கு இவ்வாறான ரெட்கார்டு கொடுக்கப்பட்டு, சினிமாவை விட்டு அவர்கள் விலக்கி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அசின்

கடந்த 2000ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை அசின். கஜினி படத்தில் சூரியாவுக்கு ஜோடியாக அசின் நடித்த நிலையில், இரண்டாவது கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து விஜய், அஜித்குமார், சூர்யா போன்றவர்களுடன் நடித்து வந்தார் நடிகை அசின். போக்கிரி, சிவகாசி, மஜா, வரலாறு, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, வேல், கஜினி, காவலன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

இந்தி படங்களில்…

ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் இருந்து இந்தி பட உலகுக்கு சென்றார் அசின். அங்கே எப்படியும் ஒரு ஸ்ரீதேவி ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில், அவர் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடித்தார்.

இலங்கையில் படப்பிடிப்பு

கடந்த 2011ம் ஆண்டில் சல்மான் கானுடன் ரெடி என்ற படத்தில் அசின் நடித்த போது, அந்த படத்தின் படப்பிடிப்புக்காக அசின் இலங்கைக்கு சென்றார். அங்கே ஜனாதிபதி தேர்தல் நடந்து கொண்டிருந்த அந்த சூழ்நிலையில், மகிந்த ராஜபக்சே குடும்பம் சார்ந்தவர்களுடன் நெருக்கம் காட்டிய அசின், இலங்கையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அப்போது தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் சில பிரச்சனைகள் இருந்ததால் தமிழ்நாட்டு நடிகர்கள் யாரும் இலங்கைக்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்ளக்கூடாது என்ற ஒரு தடை இருந்தது.

அசினுக்கு ரெட் கார்டு

அதையும் மீறி அசின் அங்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டதோடு, அங்கிருந்து மகிந்த ராஜபக்சே குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்ததால், அசினுக்கு தமிழ் சினிமாத்துறை சார்பில் ரெட் கார்டு வழங்கப்பட்டது.

அதையடுத்து, தமிழ் சினிமாவை விட்டு அசின் ஒதுக்கி வைக்கப்பட்டார். பிறகு தமிழில் அவர் படங்களில் நடிக்கவில்லை.

எனினும் அதுபற்றி அசின் பெரிதும் கவலைப்படவில்லை. அதுபற்றி கண்டுகொள்ளாத அசின், தொடர்ந்து இந்தி பட வாய்ப்புகள் இருந்ததால் அந்த படங்களில் நடிக்கலாம் என்று நடித்துக் கொண்டு வந்தார்.

தமிழ் சினிமா துறையினரிடம், எனக்கு தெரியாமல் நடந்துவிட்டது தவறு என்று கூறி அவர் மன்னிப்பு கூட கேட்கவில்லை.

மைக்ரோமேக்ஸ் அதிபர் திருமணம்

இந்நிலையில் அசின் இந்தி படங்களில் நடித்து பெரிய அளவில் அவரால் ஜெயிக்க முடியவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவன அதிபரை திருமணம் செய்து கொண்டு, சினிமாவுக்கு மொத்தமாக முழுக்கு போட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கையை தொலைத்தவர்

அப்படி என்றால் இலங்கை நாட்டுக்கு போனதால்தான், சினிமா வாழ்க்கையை தொலைத்தாரா நடிகை அசின் என்ற தகவலால், ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam