அசினுக்கு குழந்தை பிறந்த போது.. அந்த நடிகர் செய்த விஷயம்..! பல ஆண்டு ரகசியத்தை உடைத்த கணவர்..!

நடிகை அசின் கோலிவுட்ல முன்னணி நடிகையாக இருந்த பிறகு பாலிவுட்டில் நடிக்க சென்று தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட அற்புத நடிகை.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் கண் அசைவை பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தார்கள்.

திரை உலகில் பீக்கில் இருந்த சமயத்திலேயே நடிகை அசின் தொழிலதிபரான ராகுல் ஷர்மாவை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

அசினுக்கு குழந்தை பிறந்தப்ப..

நடிகை அசின் திருமணமானதை அடுத்து திரையுலகை விட்டு முற்றிலும் ஒதுங்கி விட்டார். இந்த சூழ்நிலையில் அவர் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து அசினின் கணவர் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசியிருக்கும் பேச்சானது தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அது குறித்த விரிவான பதிவை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நடிகை அசின் தமிழ் திரை உலகில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் கேரள பெண்ணாகவே நடித்து மலையாள தமிழ் பேசி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

அதிலும் இவர் பேசிய வசனமான அய்யடா என்ற வசனம் என்றும் ஃபேமஸ் ஆனது. இதனைத் தொடர்ந்து அசினுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தார்.

இவர் நடிப்பில் வெளி வந்த படங்கள் தொடர்ந்து ரிலீஸ் ஆகி ஆசின் அலை தான் அடித்தது என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு காலகட்டத்தில் திரைவுலகில் படு பிஸியாக இருந்திருக்கிறார்.

குறிப்பாக இவர் நடிப்பில் வெளி வந்த கஜினி படத்தில் இவர் செய்திருந்த கல்பனா கதாபாத்திரத்தை இன்று வரை ரசிகர்கள் மறக்க முடியாது. அந்த அளவு அவர்களின் இதயத்தில் நிலையான இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த நடிகர் செய்த வேலை..

தமிழ் படம் அல்லாமல் ஹிந்தி படங்களிலும் நடித்த இவர் அமீர்கான், சல்மான்கான், அக்ஷய் குமார் ஆகியோரோடு ஜோடி போட்டு நடித்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தில் சிஇஓவாக இருந்த ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்தார்.

தென்னிந்திய படங்களில் கிடைத்த வரவேற்பு இவருக்கு ஹிந்தி படத்தில் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இவர் நடிப்பில் வெளியான ஹவுஸ்புல், ரெடி, போல் பச்சான், கில்லாடி 786 ஆகிய படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

பல்லாண்டு ரகசியத்தை உடைத்த கணவர்..

இந்நிலையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட அசினின் கணவர் ராகுல் ஷர்மா பேசும் போது எனது மகள் பிறக்கும் நேரத்தில் அக்ஷய் குமார் எனக்கு அடிக்கடி போன் செய்து குழந்தை பிறந்தவுடன் சொல்லுங்க என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

இதனை அடுத்து குழந்தை பிறந்ததும் அவருக்குத் தான் முதலில் போன் செய்தேன். போன் செய்து பிரதர் ஒரு நல்ல செய்தி என்று சொன்னேன். அதற்கு அவர் பென்டாஸ்டிக் என்று சொன்னார்.

அசினுக்கு குழந்தை பிறந்தால் உடனே கொச்சி வர வேண்டும் என்று முடிவு செய்து அவர் விமானத்தை தயாராக வைத்திருந்தார். எனது குடும்பத்தினர் வரும் முன்பே அவர் வந்து சேர்ந்து விட்டார்.

இந்த விஷயத்தை சொன்னவுடன் ரசிகர்கள் அனைவரும் வாய்ப்பிளந்து இந்த விஷயத்தை கேட்டதோடு மட்டுமல்லாமல் இதை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள். இதை அடுத்து இணையத்தில் அதிக அளவு பேசும் பொருளாக இந்த விஷயம் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version