மொதல்ல விஜய்கிட்ட போய் கேளுங்க.. என்னன்னு.. கடுப்பான உதயநிதி ஸ்டாலின்..! தீயாய் பரவும் வீடியோ..!

நடிகர் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் ரிலீசான முதல் நாளில் இருந்து படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தது.

தொடர்ந்து படத்தின் வசூலும் 300 கோடியை நெருங்கி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியின் மாநாட்டிற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்,

இதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய்க்கு மாநாடு நடத்த இடம் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக ஒரு லட்சம் பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடி நிற்க முடியாத அளவுக்கான இடம் மட்டும் தான் நடிகர் விஜய்க்கு கிடைக்கிறது.

பெரிய கட்சிகள் 20 லட்சம் பேரை ஒரு இடத்தில் கூட்டி நிற்கவைக்கும் அளவுக்கான பெரிய இடங்கள் நடிகர் விஜய்க்கு கிடைக்கவில்லை. இதற்கு பல்வேறு அரசியல் அழுத்தங்கள் தான் காரணம் என கூறப்படுகிறது.

நிலத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கும் நில உரிமையாளர் அடுத்த சில நாட்களின் இடம் கொடுக்க முடியாது என கை விரித்து விடுகின்றனர். இப்படி நிலா உரிமையாளர்களை மிரட்டி நடிகர் விஜய்க்கு மாநாடு நடத்த இடம் கிடைக்காமல் செய்கிறார்கள் சில அரசியல் தலைகள் என அரசல் புரசலாக கிசுகிசுக்கப்பட்டது.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும் போது என்னுடைய கட்சிக்கு என்னென்ன குடைச்சல் கொடுத்தார்களோ அத்தனையும் விஜயின் கட்சிக்கும் கொடுப்பார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் வர வேண்டும்.

இதெல்லாம் சிறு பிரச்சினை. இதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க தேவையில்லை. நாம் நம்முடைய பணியில் கவனமாக இருப்போம் என பேசி இருந்தார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த தமிழக விளையாட்டு துறை அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் நடிகர் விஜயின் மாநாட்டிற்கு பிரச்சினை கொடுக்கப்படுகிறது என்று கூறுகிறார்களே..? என்று பத்திரிகையாளர் ஒரு கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின் என்ன பிரச்சனை..? என்ன பிரச்சனை என்று முதலில் விஜய்யிடம் கேளுங்கள். அவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று பதில் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆளும்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாநாடு நடத்த கிடைக்கக்கூடிய அதே இடம் ஏன் நடிகர் விஜய்க்கு கிடைக்கவில்லை..? இதற்கு காரணம் கூற முடியுமா..? என்று இணைய பக்கங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version