சுனைனாவுக்காக அடம்பிடித்த நகுல்.. பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்!..

ஒவ்வொரு நடிகைக்குமே அவர்களது முதல் படம் என்பது முக்கியமான படமாக இருக்கிறது. ஏனெனில் முதல் படத்தில் நடிக்கும் போது நடிகைகளுக்கு சினிமாவில் பெரிதாக அனுபவம் இருக்காது.

பெரிதாக நடிக்கவும் தெரிந்திருக்காது. பெரும்பாலும் மாடலிங் துறையிலிருந்து வரும் பெண்களுக்கு கொஞ்சமாக நடிக்க தெரிந்திருக்கும் ஆனால் நேரடியாக சினிமாவிற்கு வரும் பெண்களுக்கு அவ்வளவு கூட நடிக்க தெரியாது.

நடிகை சுனைனா:

இருந்தாலும் கூட முதல் படத்தில் வரவேற்பை பெற்றாக வேண்டும் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தால் அது அவர்களது மார்க்கெட்டை பாதித்துவிடும். இந்த நிலையில் முதல் திரைப்படத்திலேயே தமிழக அளவில் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக அறிமுகமானவர் நடிகை சுனைனா.

 

அவர் நடித்த முதல் திரைப்படம் காதலில் விழுந்தேன் திரைப்படம்தான். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படமாக இது இருந்தது. அந்த சமயங்களில் எல்லாம் சன் பிக்சர்ஸ் ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறது என்றாலே சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அனைத்து தொலைக்காட்சிகளிலும் இந்த படங்களின் விளம்பரம் தான் அதிகமாக ஓடும்.

அடம்பிடித்த நகுல்

காதலில் விழுந்தேன் திரைப்படத்திற்கும் அப்படி ஆக விளம்பரம் அதிகமாக ஒளிபரப்பானது. அதன் மூலமாக சுனைனா மிக சீக்கிரத்திலேயே தமிழகம் முழுவதும் அதிக பிரபலம் அடைந்தார். அதற்கு பிறகு சுனைனாவிற்கும் வாய்ப்புகள் அதிகமாக வர துவங்கியது.

காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் நகுல் இவருக்கு ஜோடியாக நடித்தார். பிறகும் மாசிலாமணி திரைப்படத்திலும் நகுலுடன் சேர்ந்து நடித்திருந்தார் அதற்க்கு பிறகு நகலுக்கும் சரி, சுனைனாவிற்கும் சரி தமிழ் சினிமாவில் அதிகமாக வாய்ப்புகள் என்பது இருக்கவில்லை.

தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் இருவருமே வேறு வேறு மொழிகளில் எல்லாம் முயற்சி செய்து வந்தனர். இந்த நிலையில் சுனைனா திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடலாம் என்கிற மன நிலைக்கு வந்துவிட்டார்.

பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்

அவர் ஒரு யூட்யூப்பரை காதலித்து வருகிறார் சீக்கிரத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக பேச்சிக்களும் இருந்து வருகின்றன. இந்த நிலையில் வாஸ்கோடாகாமா படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சந்துரு என்பவர் நகுல் மீது நிறைய குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது படத்திற்காக நிறைய நடிகைகள் தேர்வாணர்கள். ஆனால் தேர்வான நடிகைகளை எல்லாம் நீக்கிவிட்டு நடிகை சுனைனாவை நடிக்க வைத்தார் நகுல். அவருக்கு சுனைனா மீது ஒரு ஆசை இருக்கிறது என்று சந்துரு தெரிவித்திருந்தார்.

இந்த பேச்சு இப்பொழுது சர்ச்சையாக துவங்கி இருக்கிறது. சிலர் நகுல் பற்றி தவறாக பேச வேண்டாம் அவர் அப்படிப்பட்டவர் கிடையாது என்று கூறி வந்தாலும் இன்னும் சிலர் சுனைனாவிற்கு இவருக்கும் அப்படி என்ன தொடர்பு இருக்கிறது என்று கேட்க துவங்கி இருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version