அந்த நேரத்துல Mood போயிடுது.. நானே நல்லா பண்ணிடுவேன்.. பிரியங்கா மோகன் ஓப்பன் டாக்..

குறுகிய காலத்திலே டாப் ஹீரோயின் இடத்தை தக்கவைத்தவர் நடிகை பிரியங்கா மோகன் பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் சென்னையில் பிடெக் படித்து முடித்து விட்டு IT யில் வேலை செய்ய விருப்பம் இல்லாமல் மாடலிங் துறையில் சென்று அதன் மூலம் சினிமாவில் நடிகையானார்.

இவரின் முதல் திரைப்படம் 25 வயதில் கன்னடத்தில் வெளிவந்த Ondh Kathe Hella என்கிற படம் தான். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்தும் பெரிதா ஸ்கோப் இல்லை. இருந்தாலும் முயற்சியை விடாமல் தொடர்ந்து வாய்ப்பு தேடிய அவர் தெலுங்கில் ‘கேங் லீடர்’ படத்தில், நானிக்கு ஜோடி போட்டு நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார்.

அந்த படத்தின் வெற்றிதான் இவரை கோலிவுட் சினிமா பக்கம் கொண்டுவந்து சேர்த்து. இயக்குனர் நெல்சன் திலீப் குமார், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘டாக்டர்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தில் பக்காவாக பெர்பார்மென்ஸ் செய்து வேற லெவல் ஹிட் கொடுத்து முதல் படத்திலே முத்திரை பதித்துவிட்டார் பிரியங்கா.

இதையும் படியுங்கள்: படிக்காதவன் படத்தில் சிறு வயசு ரஜினியாக நடித்த சிறுவன் இந்த நடிகையின் கணவனா..? வைரல் போட்டோஸ்..

அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி லட்சத்தில் சம்பளம் வாங்கியவர் கோடியில் வாங்க துவங்கிவிட்டார். அதன் பின்னர் டான் , எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். பின்னர் தனுஷுக்கு ஜோடியாக ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்க மட்டும் 2 கோடி சம்பளம் வாங்கி டாப் ஹீரோயின்களையே விழிபிதுங்க வைத்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பிரியங்கா மோகன், தங்கதுரையின் கடி ஜோக் கேட்டு அதை புரிந்துக்கொள்வதற்குள் என் மூடே போய்விடும் என சலிப்புடன் கூறியிருக்கிறார். அவர் நான் டயலாக் பேப்பர் படித்துக்கொண்டிருக்கும்போது மொக்கை ஜோக் சொல்லி சாவடிப்பார். அதை கேட்டு அவரை விட நானே பெட்டர் ஆக ஜோக் அடிப்பேன் என மனதை தேத்திக்கொள்வேன் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ:

நடிகை பிரியங்கா மோகன் தற்போது தெலுங்கு, தமிழ் என பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். தெலுங்கில் ஓஜி என்ற பவன் கல்யாணின் படத்திலும், சரிபோதா சனிவாரம் என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார். அடுத்து, தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ப்ரதர் என்ற படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version