அதிதி ஷங்கர் ரகசிய திருமணம்..? மாப்பிள்ளை யாருன்னு பாருங்க.. அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகைகள் என்று ஒரு சிலர் இருந்து வருகின்றனர். எப்படி தலைமுறை தலைமுறையாக கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்களின் மகன்கள் கதாநாயகனாகவே நடிக்கிறார்களோ அதே போல கதாநாயகர்களின் மகள்களும் தமிழ் சினிமாவில் நடிப்பது உண்டு.

ஏற்கனவே நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் மாதிரியான ஒரு சில வாரிசு நடிகைகள் தமிழ் சினிமாவில் இருந்து வரும் நிலையில் அடுத்து வளர்ந்து வரும் வாரிசு நடிகையாக அதிதி ஷங்கர் இருந்து வருகிறார். இயக்குனர் சங்கரின் மகள் என்பதாலேயே தொடர்ந்து பெரிய திரைப்படங்களில் மட்டுமே வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் அதிதி ஷங்கர்.

அதிதி ஷங்கர் ரகசிய திருமணம்

முதன்முதலாக அதிதி ஷங்கர் இயக்குனர் முத்தையா இயக்கிய விருமன் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். முதல் திரைப்படமே இவருக்கு அதிகமான வரவேற்பை பெற்று கொடுத்தது. ஏனெனில் விருமன் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

அந்த திரைப்படத்தில் சில பாடல்கள் நல்ல வெற்றியை கொடுத்து இருந்தன. மேலும் அந்த மதுரைக்கார பெண் கதாபாத்திரம் அதிதி சங்கருக்கு மிகச் சிறப்பாகவே செட்டாகி இருந்தது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்தார் நடிகை அதிதி ஷங்கர்.

மாப்பிள்ளை யாருன்னு பாருங்க

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று வரும் அதிதி ஷங்கர் பாடல்கள் பாடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ஒவ்வொரு திரைப்படத்திலும் இவர் ஏதாவது ஒரு பாடலை பாடி வருவது உண்டு அவரது முதல் திரைப்படமான விருமன் திரைப்படத்திலேயே ஒரு பாடல் அவர் பாடி வெளியானது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் விழாவில் வந்த அதிதி ஷங்கர் பாடும் பொழுது அது அதிகமான விமர்சனத்திற்கு உள்ளானது. இதனை தொடர்ந்து அதிதி சங்கருக்கு அவ்வளவாக பாட தெரியவில்லை என்று பலரும் விமர்சிக்க துவங்கினர்.

உறைந்து போன ரசிகர்கள்

இருந்தாலும் கூட அவரது ஆர்வம் அதனால் குறையவில்லை. தொடர்ந்து படங்களில் பாடி கொண்டுதான் இருக்கிறார் அதிதி ஷங்கர். இந்த நிலையில் அடுத்து தமிழில் பெரிய வெற்றிகளை கொடுத்த இயக்குனரான விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதிதி ஷங்கர்.

அந்த திரைப்படத்தில் அதர்வாவின் தம்பி கதாநாயகனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்குப் பிறகு அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் புகைப்படங்கள் ஏற்கனவே ஒரு முறை வெளியாகி அதிக சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதை பார்த்த பலரும் அதிதி சங்கரும் அர்ஜுன் தாசும் காதலித்து வருவதாக பேசி வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் அதிதி சங்கரும் அர்ஜுன் தாசும் திருமணம் செய்து கொள்வது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

அது என்னவென்று பார்க்கும் பொழுது அதுவுமே அந்த படத்தில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சிகள் இருக்கின்றன அதற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் என்று கூறப்படுகிறது.  இதுகுறித்து நெட்டிசன்கள் பேசும் பொழுது படத்தை பிரபலமாக்குவதற்காக இப்படி அவர்களே படப்பிடிப்பின் புகைப்படங்களை லீக் செய்கின்றனர் என்று கூறி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version