பார்வையால் போதையேற்றும் அதிதி ஷங்கர்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் இயக்குனரின் செல்வாக்கால் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அதிதி ஷங்கர். இயக்குனர் சங்கரின் மகளான அதிதி ஷங்கர் ஆரம்பத்தில் சினிமாவின் மீது பெரிதாக ஈடுபாடு எதுவும் இல்லாமல்தான் இருந்தார்.

திடீரென்று அவருக்கு சினிமாவின் மீது ஈடுபாடு வந்த காரணத்தினால் தொடர்ந்து சினிமாவில் நடிக்க துவங்கினார். பொதுவாக சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் தங்களது 18 அல்லது 19 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமாகி விடுவார்கள்.

அப்பொழுதுதான் அவர்களுக்கு மார்க்கெட் என்பது ஒரு பத்து அல்லது 15 வருடங்களாவது இருக்கும். ஆனால் அதிதி சங்கரை பொருத்தவரை அவருக்கு அதிக வயதான பிறகுதான் சினிமாவில் கதாநாயகியாகவே அறிமுகமானார்.

செல்வாக்கில் வந்த வாய்ப்பு:

அவரது வயதில் இதற்கு முன்பு யாரும் கதாநாயகியாக அறிமுகமானது கிடையாது. ஆனால் இயக்குனர் சங்கரின் மகள் என்பதால் மட்டுமே அதிதி ஷங்கர் எளிதாக வாய்ப்பை பெற்றார். ஆரம்பத்தில் பாடல்கள் பாடுவதன் மீதுதான் ஆர்வம் காட்டி வந்தார் நடிகை அதிதி ஷங்கர்.

கனி என்னும் தெலுங்கு திரைப்படத்தில் ரோமியோ ஜூலியட் என்கிற பாடலை பாடியிருந்தார். அதனை தொடர்ந்து தமிழில் கார்த்தி நடித்த விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அதிதி ஷங்கர்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் மதுர வீரன் என்கிற ஒரு பாடலையும் பாடியிருந்தார். மேலும் இந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான சீமா விருதையும் அவர் பெற்றார்.

முன்னணி நடிகை:

பெரும்பாலும் எந்த ஒரு நடிகைக்கும் முதல் படத்திலேயே இவ்வளவு அங்கீகாரங்கள் கிடைக்காது என்றாலும் வாரிசு நடிகை என்னும் காரணத்தினால் அதிதி சங்கருக்கு கிடைத்தது. அதனை தொடர்ந்து மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் அதிதி ஷங்கர்.

ஆனால் விருமன் திரைப்படத்தில் இருக்கும் அளவிற்கு முக்கியமான கதாபாத்திரம் இந்த படத்தில் இவருக்கு இல்லை. அதனை தொடர்ந்து தற்சமயம் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கி வரும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து இன்னும் சில வருடங்கள் அவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சம் அவரது திருமணம் நடக்கும் வரையிலும் அவர் கதாநாயகியாக நடிப்பார். அதற்கு பிறகு அவர் நடிப்பை விட்டு சென்று விடுவார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

இதற்கு நடுவே மற்ற நடிகைகள் போலவே அதிதி சங்கரும் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சிவப்பு உடை அணிந்து அதிதி ஷங்கர் வெளியிட்டிருக்கும் க்யூட் புகைப்படங்கள் ரசிகர்களை அதிகமாக கவரும் வகையில் அமைந்திருக்கின்றன. டீசண்டான லுக்கில் இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்சமயம் அதிகமாக வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version