இதை வாங்காம எப்படி வளர முடியும்.. நெறைய வாங்கி இருக்கேன்.. கூச்சமே இல்லாமல் ஒப்புக்கொண்ட அதிதி ஷங்கர்..!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அதிதி ஷங்கர். தமிழ் சினிமாவை பொருத்தவரை அதில் வாய்ப்பு பெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது.

ஒவ்வொரு நடிகரும் சரி நடிகையும் சரி தற்சமயம் உயரத்தை தொடுவதற்கு முன்பு நிறைய கஷ்டங்களை சந்தித்து இருப்பார்கள். நடிகை பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நடிகைகள் எல்லாம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்து தமிழ் சினிமாவில் பெரும் முயற்சி செய்து வந்தவர்களாக இருக்கின்றனர்.

பிரபலமடைந்த அதிதி ஷங்கர்:

அதே சமயம் தங்களுடைய தந்தை சினிமாவில் பெரிய பிரபலமாக இருப்பதை பயன்படுத்திக் கொண்டு சினிமாவிற்கு வந்த நடிகைகளும் உண்டு. அப்படியான நடிகைகளில் ஒருவர் தான் அதிதி சங்கர்.

எடுத்தவுடனே அதிதி ஷங்கருக்கு முத்தையா இயக்கிய விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்திலேயே ஒரு பாடலையும் அதிதி பாடியிருந்தார். பொதுவாக சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருந்து வரும் பெண்களுக்கு இப்படியான கதாபாத்திரம் உடனே கிடைத்துவிடாது.

அந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை பார்த்த பலரும் சிவகார்த்திகேயனுக்கு அக்கா மாதிரி இருக்கிறார் அதிதி சங்கர் என்று அது குறித்து விமர்சனம் தெரிவித்து வந்தனர்.

வீட்டில் அடி வாங்கியிருக்கேன்:

இருந்தாலும் கூட தொடர்ந்து தமிழ் சினிமாவில் பயணித்து வருகிறார் அதிதி ஷங்கர். இருந்தாலும் அவருக்கு கிடைக்கும் இந்த நட்சத்திர அந்தஸ்து என்பது அவரது தந்தையின் மூலமாக கிடைப்பதுதான் என்று பேசப்படுகிறது. ஏனெனில் இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகையாக இவர் அறியப்படுகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவரிடம் பேட்டி எடுத்த பொழுது எப்போதாவது வீட்டில் தப்பு செய்து அம்மாவிடம் அடி வாங்கி இருக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அதிதி ஷங்கர் கூறும் பொழுது ”இது என்ன வகையான கேள்வி அடி வாங்காமல் எப்படி ஒருத்தர் வாழ முடியும்.

நான் எக்கச்சக்கமாக அடி வாங்கி இருக்கிறேன் குறிப்பாக ஏதாவது ஒரு தவறு செய்துவிட்டால் உடனே அதை நான் என் அம்மாவிடம் நான் சொல்லிவிடுவேன். சொல்லாமல் இருந்தால் எப்போது மாட்டுவோம் என்று பயம் இருந்து கொண்டே இருக்கும்.

அதை சொல்லிவிட்டால் அரை மணி நேரத்தில் வந்த பிரச்சனை முடிந்து விடும் அதனால் எந்த தவறு செய்தாலும் உடனே நான் அம்மாவிடம் சென்று நான் சொல்லி விடுவேன். எதையும் நான் ரகசியமாக செய்ய மாட்டேன் என்று அதிதி ஷங்கர் பதிலளித்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version