கொள்ளை அழகில் இணையத்தை கலங்கடிக்கும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி – யின் கல்யாண போட்டோஸ்..!

பிரபல கிரிக்கெட் வீரரான கே எல் ராகுல் மற்றும் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டி-க்கு  பெரியவர்களின் முன்னிலையில் சீரும் சிறப்புமாக திருமணம் நடைபெற்று முடிந்து விட்டது.

 திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெருவாரியான மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

 மேலும் இந்த பாலிவுட் நடிகை தமிழில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து தர்பார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

 இவர்களின் திருமணம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கண்டாலாவில்  சுனில் ஷெட்டியின் விருந்தினர் மாளிகையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடந்து முடிந்தது.

 மேலும் 2018 ஆம் ஆண்டிலிருந்து கிரிக்கெட் வீரரான ராகுல் மற்றும் அதியா இருவரும் காதலித்து வந்த நிலையில் பல கிசுகிசுக்கள் எழுந்தது.

 அந்த கிசுகிசுக்களை எல்லாம் சட்டை செய்து கொள்ளாமல் இவர்கள் இரண்டு வருடங்களாக லிவிங் டூகதர் முறையில் வாழ்ந்து வந்தார்கள். இதனை எடுத்து பெரியவர்களின் சம்மதத்தோடு இவர்கள் திருமணம் தற்போது நடைபெற்றுள்ளது.

 அந்த போட்டோஸை தான் தற்போது நடிகை அதியா செட்டி Instagram பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

 அதுமட்டுமல்லாமல் தனது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறி இருக்கக்கூடிய வாசகங்களை பார்த்து மிகுந்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அந்த வாசகங்கள் என்னவென்றால் உங்கள் வெளிச்சத்தில் நான் எப்படி காதலிப்பது என்று கற்றுக் கொள்கிறேன். இன்று எங்களுக்கு மிகவும் பிடித்தவர்களுடன் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியையும் அமைதியும் கொடுத்த எங்கள் வீட்டில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என்றும் அந்த வாசகங்கள் இருப்பதை பார்த்து ரசிகர்கள் குஷி அடைந்து விட்டார்கள்.

 மேலும் இந்த திருமண பந்தத்தில் இவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து ஒற்றுமையாக வாழ்வதற்கு அனைவரது ஆசீர்வாதங்களையும் வேண்டி இருப்பது தான் இதன் ஹைலைட் என்று கூறலாம்.

 மேலும் இந்த திருமண விழாவில் சுமார் 100 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது. இதில் முக்கியமாக விஷயம் என்ன என்றால் கத்ரினா கைஃப் மற்றும் விக்கி கௌஷலை போல இந்த ஜோடி திருமணத்தின் போது தொலைபேசியில் கொண்டு வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்ததாக தெரிகிறது.

இதனையடுத்து பாரம்பரிய முறைப்படி இவர்களது திருமணம் படு ஜோராக நடந்து முடிந்து விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version