தமிழில் இருக்கும் பெரும்பான்மையான நடிகைகள் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழில் நடிகைகளாக இருப்பவர்கள் வெகு சிலர்தான். அப்படியாக கோயம்புத்தூரில் பிறந்து தமிழ் சினிமாவில் நடிகையாக இருந்து வருபவர் அதுல்யா ரவி.
கல்லூரி முடித்த காலம் முதலே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்து வந்தது. இந்த நிலையில் கல்லூரி படிப்புக்கு பிறகு நிறைய குறும்படங்களில் வாய்ப்புகளை கேட்டு வந்தார்.
தமிழில் எண்ட்ரி:
சில குறும்படங்களில் இவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது. அதனை தொடர்ந்து திரைப்படங்களிலும் வாய்ப்புகளை பெற்றார். அதுல்யா ரவி அது 2017இல் வெளியான காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் அறிமுகமானார்.
athulya ravi2கே கிட்ஸ் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் படமாக காதல் கண் கட்டுதே திரைப்படம் இருந்தது. அதனை தொடர்ந்து கதாநாயகன், ஏமாளி நாகேஷ் திரையரங்கம் என்று ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்.
ஆனால் அந்த திரைப்படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு பெறாத காரணத்தினால் அதுல்யா ரவிக்கும் பெரிதாக வரவேற்பு என்பது இல்லாமல் இருந்து வருகிறது. அதே சமயம் வருடா வருடம் ஏதாவது ஒரு திரைப்படத்திலாவது கண்டிப்பாக வாய்ப்புகளை பெற்று நடித்து விடுகிறார் அதுல்யா ரவி.
திருட்டு வழக்கு:
அதன் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆகிவிட வேண்டும் என்பது இவரது ஆசையாக இருந்து வருகிறது. சமீபத்தில் மீட்டர் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். அது ஒரு தெலுங்கு திரைப்படம் முதன்முதலாக அந்த திரைப்படம் மூலமாகதான் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார் அதுல்யா ரவி.
இந்த நிலையில் சமீபத்தில் அதுல்யா ரவி வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் அதிகமாக பேசப்பட்டு வந்தது. தற்சமயம் அதுல்யா கோயம்புத்தூரில் உள்ள தன்னுடைய தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் இருந்த பாஸ்போர்ட் மற்றும் 2000 ரூபாய் பணம் திருடு போனது. இதனை தொடர்ந்து அங்கு உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார் நடிகை அதுல்யா ரவி.
இதனை அடுத்து விசாரித்த பொழுது அதுல்யாவின் வீட்டில் வேலை பார்க்கும் செல்வி எனும் பெண் தனது தோழியுடன் சேர்ந்து அந்த பாஸ்போர்ட்டையும் பணத்தையும் திருடியது தெரியவந்தது. எதற்காக இதை செய்தார் என்று பார்க்கும் பொழுது சம்பளம் தொடர்பாக அதுல்யாவிற்கும் அந்த பெண்ணுக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகவும் அதனால் கோபத்தில் அதுல்யா வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்று அவரது பாஸ்போட்டையும் சேர்த்து திருடியதாகவும் கூறப்படுகிறது.