“ஹிந்தி நிகழ்ச்சியில் சீண்டிய தொகுப்பாளினி..” மேடையிலேயே பதிலடி கொடுத்த அட்லீ..!

தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் இயக்குனர் அட்லீ. அவர் இயக்கி வெளியான முதல் திரைப்படமான ராஜா ராணி திரைப்படமே எதிர்பார்த்த அளவை விடவும் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தன.

தமிழில் தொடர்ந்து தோல்வி முகம் காணாத ஒரு இயக்குனராக அட்லீ இருந்து வருகிறார். அவரது குருவான ஷங்கர் கூட பாய்ஸ் என்கிற ஒரு தோல்வி படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால் அட்லீயைப் பொறுத்தவரை அவர் இயக்கிய திரைப்படங்கள் எல்லாமே மாஸ் ஹிட் கொடுத்த திரைப்படங்கள் என்று தான் கூற வேண்டும்.

உதவி இயக்குனராக பயணம்:

இயக்குனர் ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் போன்ற திரைப்படங்களில் பணிபுரிந்து வந்த அட்லீ அதற்குப் பிறகு தனியாக வந்து ராஜா ராணி திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

இந்த நிலையில் அடுத்து அவர் இயக்கிய திரைப்படம் தெறி. தெறி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து தமிழில் அவர் இயக்கிய மெர்சல், பிகில் ஆகிய எல்லா படமும் வெற்றியை கொடுத்தது.

ஆனால் தொடர்ந்து இவர் நிறைய திரைப்படங்களை காப்பி அடித்து எடுத்து வருகிறார் என்று குற்றச்சாட்டுகள் வந்த நிலையில் பிறகு பாலிவுட்டில் திரைப்படம் எடுக்க சென்றுவிட்டார். அட்லீ பாலிவுட்டில் இயக்கி போன வருடம் வெளியான திரைப்படம் ஜவான்.

ஹிந்தியில் வெற்றி:

ஆயிரம் கோடியை தாண்டி வெற்றியை கொடுத்த இந்த திரைப்படம் அட்லீக்கு முக்கியமான திரைப்படம். பாலிவுட்டில் இருக்கும் பெரும் நடிகர்கள் பலரும் தன்னை வைத்து திரைப்படம் இயக்கும்படி அட்லீயிடம் கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அட்லீயிடம் ஹிந்தியில் கேள்வி கேட்ட தொகுப்பாளர் ஒருவருக்கு சிறப்பான சம்பவத்தை செய்து உள்ளார் இயக்குனர் அட்லீ. அட்லீயை பொருத்தவரை அதற்கு இந்தி அவ்வளவாக தெரியாது. ஆங்கிலம்தான் ஓரளவுக்கு தெரியும்.

அதை வைத்தேதான் அவர் பாலிவுட்டில் திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட பொழுது அவரிடம் பேசிய தொகுப்பாளர் அவரிடம் ஹிந்தியில் கேள்வி கேட்டிருக்கின்றனர்.

அதற்கு எப்படி பதில் சொல்ல முடியும் எனவே அட்லீ உடனே நான் நல்லா இருக்கேன் நீங்க நல்லா இருக்கீங்களா என்று தமிழில் பதில் அளித்துள்ளார் தொகுப்பாளருக்கு தமிழ் தெரியாது என்பதால் அவர் சிரித்திருக்கிறார் ஆனால் எப்படி நீங்கள் ஹிந்தியில் கேள்வி கேட்டால் எனக்கு புரியாதோ அதே மாதிரி நான் தமிழில் கேள்வி கேட்டால் உங்களுக்கு புரியாது அதை புரிந்து கொள்ளுங்கள் என்று விளக்கும் வகையில் தான் அந்த செயலை செய்திருந்தார் அட்லீ. அது சமீப காலமாக சமூக வலைதளங்களில் மீண்டும் வலம் வந்துக்கொண்டுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version