“புருஷன் என்றால் இப்படி இருக்கணும்..” நடிகை பிரியா அட்லீ தடாலடி..!

பிரம்மாண்டமான காட்சிகளை அமைத்து சினிமாவின் மற்றொரு பக்கத்தை காட்டிய இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தான் அட்லீ. இவர் முதல் முதலாக இயக்கிய ராஜா ராணி திரைப்படம் சூப்பர் டூப்பர் கிட்டை கொடுத்தது.

இதனை அடுத்து இவர் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை கொடுத்து இளம் இயக்குனர்களில் அதிக அளவு வெற்றி பெற்ற இயக்குனராக ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றார்.

தற்போது தமிழ் திரை உலகில் டாப் இயக்குனர் இடத்தில் இருக்கும் இவர் அண்மையில் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற பாலிவுட் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை அடைந்து விட்டார். இந்தப் படத்தின் மூலம் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா பாலிவுட்டில் தடம் பதித்தார்.

மேலும் இவர் நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து அட்லீ  மேலும் பல படங்களை இயக்குவதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

தற்போது அட்லீயின் மனைவி பிரியா பேட்டி ஒன்றில் தனது கணவர் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இதில் அட்லீ எனக்கு மிகச்சிறந்த கணவர் என்று கூறியதோடு நிற்காமல் அட்லீயின் வெற்றிக்குப் பின் நான் இருக்கிறேனா? என்று தெரியவில்லை.

எனினும் என் வாழ்க்கையில் அவர் என்னை உத்வேகப்படுத்தக்கூடிய ஒரு சிறந்த அம்மாவாக இருக்கிறார் என்பதை தெரிவித்திருக்கிறார்.

மேலும் அட்லீ எனக்கு ஒரு நல்ல நண்பராக எப்போதும் இருப்பவர். அத்தோடு என் மகன் மீர் வந்து என்னுடைய வாழ்க்கையை இன்னும் மகிழ்ச்சியாக மாற்றி விட்டான். நாங்கள் இருவரும் அவன் எதிர்காலத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்.

அட்லீ என் வாழ்க்கையில் எனக்கு எல்லாவாக திகழ்கிறார். எனவே அட்லீ போல ஒரு கணவர் மற்ற பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என அட்லீயின் மனைவி பிரியா நெகிழ்ச்சியோடு கூறிய விஷயங்கள் ரசிகர்களின் மத்தியில் மிக நல்ல பெயரை அடக்கியை பெற்று தந்துள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *