தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான புதிலே மிகக் குறுகிய காலத்திலேயே பிரபலமான இயக்குனராக வலம்வரத் துவங்கியவர் தான் அட்லீ.
இவர் முதன் முதலில் குறும்படங்களை இயக்க ஆரம்பித்து அதன் பிறகு திரைப்படத்தை இயக்கி இன்று பிரபலமான நட்சத்திர இயக்குனராக இருந்து வருகிறார்.
இயக்குனர் அட்லீ:
உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ முதன் முதலில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக தனது அறிமுகத்தை கொடுத்தார்.
இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அட்லீக்கு முதல் படமே பெயரும் புகழும் பல விருதுகளையும் தேடி கொடுத்தது.
முன்னதாக இவர் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்னர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் முகப்புத்தகம் எனும் குறும்படத்தை இயக்கியிருந்தார்.
இந்த குறும்படத்தில் நடித்தவர் தான் பிரியா. அவரையே காதலித்து அட்லீ திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து அட்லீ திரைப்படங்களை இயக்குவதில் அதிக கவனத்தை செலுத்தி வந்தார்.
அடுத்தடுத்த வெற்றிப்படங்கள்:
அவர் தெறி மெர்சல் பிகில் என அடுத்தடுத்து விஜய்யை வைத்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுக்க ஆரம்பித்தார் .
தொடர்ச்சியாக விஜய் வைத்து அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்ததால் அட்லிக்கு பெயரும் புகழும் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
இந்த ஐந்து படங்களுமே அட்லீயை இந்திய அளவில் பேசப்படும் இயக்குனராக வளர்த்தது. மதுரை சொந்த ஊர் ஆக கொண்ட அட்லீ ஒவ்வொரு படத்தையும் தனது வித்தியாசமான கண்ணோட்டத்தில் இயக்கினாலும் கூட அது கதை சர்ச்சையில் சிக்கினார்.
பழைய படங்களை அட்லீ காப்பி அடித்து எடுப்பதாக பல விமர்சனங்கள் இருந்தது. ஆனால் அவரோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தன்னுடைய வெற்றிகளை கொடுத்து வந்தார்.
தமிழ் சினிமாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே இயக்கியிருந்த அட்லீ க்கு பாலிவுட் சினிமாவில் இருந்து படங்களை இயக்கும் வாய்ப்பு வந்தது.
பாலிவுட்டில் அறிமுகம்:
முதல் படமே அங்கு நட்சத்திர ஹீரோவாக இருந்து வரும் ஷாருக்கான் வைத்து படம் இழக்க வேண்டும் என்ற வாய்ப்பு கிடைத்ததால் அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் அட்லீ.
ஜவான் படத்தை ஷாருக்கான் வைத்திருந்தார் இதுதான் அவரது முதல் ஹிந்தி திரைப்படம் கூட இந்த திரைப்படத்தில் தான் நடிகை நயன்தாராவும் பாலிவுட்டில் அறிமுகமானார்.
இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூல் ஈட்டி மாபெரும் சாதனையும் வெற்றியும் புகழும் தந்தது .
தொடர்ச்சியாக பல தோல்விகளை கண்டு வந்த ஷாருக்கானுக்கு ஜவான் திரைப்படம் மாபெரும் வெற்றியாகவும் ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும் படமாகவும் அமைந்தது .
இதனால் அட்லீ அவருக்கு மாஸ்தான இயக்குனராக மனதில் இடத்தை பிடித்து விட்டார். மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்ட சாருக்கான் தற்போது லயன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதை அடுத்து பேபி ஜான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் . இந்த திரைப்படம் தெறி படத்தின் இந்தி ரீ மேக்.
கீழ எதுவுமே போடாமல்….
இப்படியாக அடுத்தடுத்து ஹிந்தி திரைப்படங்கள் இயக்குவதில் படு பிஸியாக இருந்து வரும் இயக்குனர் அட்லீ அவ்வப்போது நேரம் கிடைக்கும் தனது மனைவியோடு ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் தற்போது மனைவி பிரியாவுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரொமான்ஸை வெளிப்படுத்தியிருக்கிறார் .
இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் அட்லீயின் மனைவி பிரியாவை தான் பங்கமாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.
அர்ப்பணிக்கு வாழ்வு வந்தால் அந்தரத்தில் குடை பிடிப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப பிரியா – அட்லீ திடீரென பெரும் பணக்காரர் ஆகிவிட்டதால் டீசன்டான உடைகளை தகர்த்து எறிந்து விட்டு தற்போது கிளாமரான ஆடைகளில் படு கவர்ச்சியாக மாறிவிட்டார்கள்.
கீழ எதுவுமே போடாமல்…. இப்படி வந்து நிற்கிறாரே அதுவும் ரொமான்ஸ் வேற… என அவரை திட்டி தீர்த்து விமர்சித்து வருகிறார்கள்.