“வீட்டில் அட்டாச் பாத்ரூம் இருக்கா..!” இப்படி இருந்தா நோ ப்ராப்ளம்… இல்லைனா மாத்தி அமையுங்க..!!

இன்று நவீன காலத்தில் வீடுகளில் அட்டாச் பாத்ரூம் இல்லாமல் இருக்காது. ஆனால் அதுவே பழைய காலங்களில் வீட்டில் கழிவறைகளை வீட்டுக்குள் வைக்கவே மாட்டார்கள். வீட்டிலிருந்து சில அடி தூரம் தள்ளித்தான் இருக்கும்.

மேலும் எந்த அட்டாச் பாத்ரூம் இதுபோல இருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் உங்கள் வீடுகளில் ஏற்படாது. அது வாஸ்து சாஸ்திரப்படி இல்லையென்றால் உங்கள் வீட்டின் மகிழ்ச்சியையும் நிதி நிலைமையும் அது வெகுவாக பாதிக்கும் என்பதால் இந்த கட்டுரையை தெளிவாக படித்து உங்களுக்கு தேவையான நிவர்த்திகளை நீங்களே செய்து கொள்ள முடியும்.

👍அட்டாச் பாத்ரூம் இன் நுழைவாயிலானது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி மட்டுமே இருக்க வேண்டும். மேலும் தென்மேற்கு திசையில் கதவானது இருக்கவே கூடாது. குளியலறை உங்கள் படுக்கை அறைக்கு அருகில் இருந்தால் உங்கள் பணிகள் முடிந்த பிறகு அந்த குளியல் அறை கதவை எப்போதும் மூடித்தான் வைத்திருக்க வேண்டும்.

👍படுக்கை அறையுடன் அட்டாச் பாத்ரூம்   இருக்கும் பட்சத்தில் நீங்கள் படுக்கை அறையில் உறங்கும்போது உங்கள் கால்களை குளியலறை நோக்கி நீட்டி உறங்கக்கூடாது. அவ்வாறு உறங்குவதின் மூலம் உங்கள் வீட்டில் சண்டைகள் அடிக்கடி ஏற்படும். மேலும் தேவையற்ற செலவுகளுக்கு இது வழிவகுக்கும் .

👍வெஸ்டர்ன் டாய்லெட் அதிகமாக வைத்திருப்பவர்கள் கழிவறையை பயன்படுத்திய பின் அந்த மூடியை மூடாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். இது மிகவும் தவறானது இதனால் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டில் அதிகரிக்கும் நிதி நிலை பிரச்சனை ஏற்படும். எனவே அந்த மூடியை பயன்பாடு முடிந்த பின் மூடி விடுவது மிகவும் சிறப்பு.

👍 அட்டாச் பாத்ரூம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அழுக்காக இருந்தால் வாஸ்து குறைபாட்டை வீட்டுக்குள் ஏற்படுத்துவதோடு எதிர்மறை ஆற்றலை அதிகரித்து குடும்ப உறுப்பினர்களிடையே பிரச்சனைகளை தூண்டி விடும்.

👍 அட்டாச் பாத்ரூம் ஐ பொறுத்த வரை கதவு மற்றும் பாத்ரூமின் சுவர் அனைத்தும் வெளிர் நிறத்தில் தான் இருக்க வேண்டும் தரையும் அது போல் வெளிர் நிற டைல்ஸாக இருப்பது சிறப்பு இல்லையென்றால் வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்படும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …