“அம்மே நாராயணா தேவி நாராயணா…!” – அற்புத சக்தி படைத்த ஆற்றங்கால் பகவதி ..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரப் பகுதியில் இந்த ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை பெண்களின் சபரிமலை என்று அனைவரும் அன்போடு அழைப்பார்கள்.அந்த அளவு பெண்களுக்கு சிறப்பு மிகுந்த கோயிலாக இது விளங்குகிறது.

 இந்தக் கோயில் மாசி மாதம் 10 தினங்கள் திருவிழா படு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவில் ஒன்பதாம் நாளில் பொங்கல் செய்து வழிபாடு செய்வார்கள்.

 இந்த பொங்கலை செய்வதற்காக கோயில் வளாகத்தில் பண்டார அடுப்பில் தீமூட்டி கோயிலை சுற்றியுள்ள கிட்டத்தட்ட ஆறு கிலோ மீட்டர் அளவுக்கு   அனைத்து பெண்களும் இணைந்து பொங்கல் இடுவார்கள். பிறகு மதியம் 2 மணிக்கு மேல் அந்த பொங்கலை அம்மனுக்கு நெய்வேதியம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

 அப்படி அவர்கள் வழிபாடு செய்யும்போது அங்கு பெண்களுக்கு மட்டும்தான் அனுமதி உண்டு. ஆண்கள் யாரும் எந்த கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதி கிடையாது. இங்கு பொங்கலை வைக்கும் பெண்களுக்கு பகவதி அம்மன் நல்ல அதிர்ஷ்டத்தையும் செழுப்பையும் தருவதாக இவர்கள் நம்பிக்கையோடு வழிபாடு செய்து வருகிறார்கள்.

 அது மட்டுமல்லாமல் இந்த அம்மன் கற்புக்கரசி கண்ணகி தான் என்று ஒரு சாரார் கூறி வருகிறார்க.ள் எனவே ஆற்றுக்கால் அம்மன் பகவதியை வழிபடுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகளையும் வாழ்க்கைக்கு தேவையான செழிப்பையும் பெண்கள் பெற முடியும் என்று அனைவரும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

 நீங்களும் முடிந்தால் ஒரு முறை இந்த அம்மனை சென்று தரிசித்து வணங்குங்கள் உங்கள் குடும்பமும் செல்வ செழிப்பில் உயரும்.

சபரிமலை செல்வதற்கு ஆண்களுக்கு மட்டுமே உரிமை உள்ளதோ இது படி எந்த கோயிலுக்கு பெண்கள் மட்டுமே செல்லக்கூடிய ஐதீகம் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருவது இதன் தனி சிறப்பாக கருதப்படுகிறது.

 மேலும் கண்ணகி மதுரையை நிறுத்திவிட்டு ஆற்றுக்கால் வழியாக வந்து அமர்ந்து இளைப்பாறிய இடத்தில் கண்ணகிக்காண கோவில் தான் நாம் ஆற்றங்கால் பகவதி அம்மன் கோயில் என்று கூறி வருவதாக சிலர் கூறுவது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.

 எனினும் எந்த அம்மனை வழிபடக்கூடிய பெண்கள் வாழ்வில் நல்ல நிலையை அடைந்து வருவதாக அனைவருக்குமே நம்பிக்கை உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …