46 வயது ஆன நடிகை ஒருவரை திருமணம் செய்தாக வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் அக்கட தேசத்து சின்னத்திரை நடிகர்கள் சிலர்.
என்ன விவரம்..? என்ன கூத்து..? என்று விவரமாக பார்க்கலாம் வாருங்கள். நடிகை சுரேகா வாணி தமிழில் உத்தமபுத்திரன் என்ற படத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு பரீட்சியமான நடிகையாக மாறினார்.
அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் போதை பொருள் வழக்கில் கைதான தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கே பி சவுத்ரி என்பவர் சினிமா பிரபலங்களுக்கு போதை பொருட்களை சப்ளை செய்து வந்ததாக தகவல்கள் வெளியாகின.
மறுபக்கம் நடிகை சுரேகா வாணி கேபி சவுத்திரியுடன் படு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவும் வெளியாகின. இதனை தொடர்ந்து போதை பொருள் விவகாரத்தில் சுரேகாவாணி சம்பந்தப்பட்டிருப்பார் போல் தெரிகிறது என இணைய பக்கங்களில் கிசுகிசுக்கள் பரவின.
விஷயத்தின் விபரீதத்தை உணர்ந்து கொண்ட சுரேகா வாணி இப்படி வதந்தியை பரப்பாதீர்கள். கொஞ்ச காலமாக என் மீது தவறான குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றது. நான் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். இதெல்லாம் போலியானது என கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மறுப்பக்கம்இவரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய சின்னத்திரை நடிகர்கள் பலர் அதிலும் இவரை விட வயதில் இளைய நடிகர்கள் கூட சுரேகாவாணியை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள் என்ற விபரம் அக்கடதேச ஊடகங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து தன்னைவிட 10 வயது இளம் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள சுரேகா வாணியும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய மகளின் மற்றும் தன்னுடைய எதிர்காலத்தின் பாதுகாப்பிற்கும் வாழ்க்கை துணைக்குமான ஒரு நபர் கண்டிப்பாக வேண்டும் என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார்.
இத்தனைக்கும் இந்த திருமணத்திற்கு அவருடைய மகளும் சம்மதம் தெரிவித்து இருந்தார் என தகவல்கள் வெளியாகின.
அதனை தொடர்ந்து இன்னொரு நடிகரும் சுரேகா வாணியை திருமணம் செய்து கொள்ள அணுகி இருக்கிறார். அவரும் சுரேகா வாணியை விட வயதில் இளையவர்.
இப்படி தன்னைவிட வயதில் குறைந்தவர்கள் தன்னை திருமணம் செய்து கொள்ள துடியாய் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்து எதற்கு வம்பு என தனியாக இருந்து விடலாமென திருமணமே வேண்டாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.
மறுபக்கம் திருமண வயதில் பெண்ணை வைத்துக்கொண்டு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு வெளிநாட்டு வீதிகளின் போஸ் கொடுத்து கொண்டிருக்கும் சுரேகாவாணியை பார்த்து ரசிகர்கள் மோசமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்னும் சிலர் திருமண வயதில் பெண்ணை வைத்துக்கொண்டு உங்களுக்கு இன்னொரு திருமணம் தேவையா..? என்றும் கூட கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.