“ஆசை ஆசையாய் மீண்டும் சுவைக்க தோன்றும் அவல் பாயசம்..!” – இப்படி செய்யுங்க..!

பால் பாயாசம், பாசிப்பருப்பு பாயாசம், வெல்ல பாயசம், பழ பாயசம், அடை பிரதமன் பாயசம், பலாப்பழ பாயசம் இப்படி பல வகைகளான பாயசங்களை நீங்கள் குடித்திருப்பீர்கள். அதிலிருந்து வேறுபட்டு இருக்கக்கூடிய அவல் பாயசத்தை இன்று உங்கள் வீட்டில் எளிதில் செய்து அசத்துவது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

அவல் பாயசம் செய்ய தேவையான பொருட்கள்

1.அவல் ஒரு கப்

2.நெய் இரண்டு தேக்கரண்டி

3.பால் இரண்டு கப்

4.முந்திரி 25 கி

5.திராட்சை 25 கி

6.ஏலக்காய் 4

7.வெல்லம் இரண்டு கப்

செய்முறை

முதலில் அவலை ஒரு வாணலியில் போட்டு சிறிதளவு நெய்யை விட்டு பொன் நிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வறுத்த இந்த அவலை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து நீங்கள் வைத்திருக்கும் பாலை நன்கு காய்ச்ச வேண்டும். குறிப்பாக பால் சுண்டக்காய்வது சுவையை கூட்டுவதாக இருக்கும்.

மேலும் எடுத்து வைத்திருக்கும் அவல் முழுவதும் நனையும்படி நீர் விட்டு வேக விடவும். பிறகு இதனோடு எடுத்து வைத்திருக்கும் வெல்லத்தை நன்கு பொடித்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதை நன்கு கலந்து கொதி வருவதற்குள் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சை போன்றவற்றை நெய்யை விட்டு நன்கு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அதே சமயம் ஏலக்காயை நீங்கள் நைசாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது அவல் மற்றும் வெல்லமும் நன்கு கலங்கி ஒரு குறிப்பிட்ட பதத்திற்கு வந்த பிறகு அடுப்பில் இருந்து அதை இறக்கி வைத்து விட்டு இளம் சூட்டில் நீங்கள் பாலை சேர்த்து விடவும். பிறகு பொரித்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சை, ஏலம் போன்றவற்றை போட்டு ஒரு இலக்கு இலக்கி விடுங்கள். இப்போது சுவையான அவல் பாயசம் ரெடி.

இதுபோல பாயசத்தை உங்கள் வீட்டில் நீங்கள் வைத்துக் கொடுத்தால் குழந்தைகள் கட்டாயம் விரும்பி குடிப்பார்கள். மேலும் ஆரோக்கியம் தரக்கூடிய எந்த பாயசத்தை வாரத்துக்கு ஒரு முறை நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு செய்து கொடுக்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …