அவதார் 2 – மூன்று நாள் வசூல்..! – கிறுகிறுன்னு வருதே..! – வசூல் மழை இல்ல.. வசூல் புயல்..!

அவதார் 2 : கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து உலக சினிமாவையே கிடுகிடுக்க வைத்தது.

முழுக்க முழுக்க வேறு ஒரு உலகத்தை திரையில் காட்டி ரசிகர்களை மிரள வைத்து இருந்தார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். இந்த படத்திற்கு பிறகு உலக சினிமாவின் பாதையே மாறியது என்று தான் கூற வேண்டும்.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அதிக பொருட்செலவு செய்து படங்களை எடுக்க தொடங்கினார்கள் பெரிய பெரிய நிறுவனங்கள். அந்த அளவுக்கு ஒரு திருப்புமுனையாக இந்த திரைப்படம் அமைந்தது.

இந்நிலையில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து அவதார் 2-ம் பாகம் வெளியாகியிருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய இந்த திரைப்படம் கொரோனா தோற்று காரணமாக படப்பிடிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு ரிலீசாகாமல் இருந்தது.

இந்நிலையில், உலகம் முழுதும் கொரோனா ஊரடங்கு முற்றிலுமாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகியிருக்கிறது. கடந்த வருடம் கூட இந்த படத்தை வெளியிட்டு இருக்கலாம்.

ஆனால் சில நாடுகளில் கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டிருந்ததால் கொரோனா கட்டுப்பாடு உச்சத்தில் இருந்தது. அப்படி இருக்கும்போது படத்தை ரிலீஸ் செய்தால் கடுமையாக வசூல் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தற்போது ரிலீஸ் செய்திருக்கிறது.

அதற்கேற்ற வசூலையும் அறுவடை செய்திருக்கிறது என்று தான் கூற வேண்டும். முதலில், 1500 கோடி ரூபாய் பட்ஜெட் என்று ஆரம்பிக்கப்பட்ட அவதார் 2 திரைப்படம் கொரோனா நெருக்கடி மற்றும் வேக வேகமாக வளர்ந்த பணவீக்கம் மற்றும் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களுக்காக 2800 கோடி ரூபாய் பட்ஜெட் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை வாங்கி வெளியிட்ட டிஸ்னி நிறுவனம் மிகுந்த கவலையில் தான் இருந்தது.

முதல் பாகம் ஆயிரம் கோடி ரூபாய்களை வசூல் செய்தது கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய் செலவில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படம் 3000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டினால் தான் தலை தப்பும் என்ற நிலையில் டிஸ்னி நிறுவனம் இருந்தது.

இந்நிலையில், டிஸ்னி நிறுவனத்தின் தலையை காப்பாற்றி இருக்கிறார்கள் ரசிகர்கள் என்று தான் கூற வேண்டும். காரணம் இந்த திரைப்படம், முதல் மூன்று நாட்களில் உலக அளவில் 3500 கோடி ரூபாய் வசூலித்து பிரம்மாண்ட சாதனையை படைத்திருக்கிறது.

ஏற்கனவே லாபம் என்ற கட்டத்திற்குள் இந்த திரைப்படம் சென்றுவிட்டது. தொடர்ந்து கிருஸ்துமஸ் விடுமுறை என்பதால் அடுத்தடுத்த நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று கணிக்கிறார்கள் பாக்ஸ் ஆபிஸ் ஜோதிடர்கள்.

இந்த படத்தின் வெளியீடு காரணமாக தமிழ் திரைப்படங்கள் கூட சில திரைப்படங்கள் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் இன்னும் பத்து நாட்களுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை என்ற நிலையில் அடுத்த பத்து நாட்களுக்கு இந்த படம் வசூல் மழையில் நனையும் என்றும் அடுத்த அடுத்த நாட்களில் இந்த திரைப்படம் 7,000 கோடி வசூல் என்ற நிலையை எட்டிவிடும் என்றும் கூறுகிறார்கள்.

அப்படி செய்தால் ஒரு திரைப்படம் 7,000 கோடி ரூபாய் வசூல் செய்தது மிகப்பெரிய சாதனையாக உலக நாடுகளால் பார்க்கப்படும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த விவரம் அறிந்த ரசிகர்கள் கிறுகிறுன்னு வருதே என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …