“அம்மாடியோவ்… – அவதார் 2 முதல் நாள் வசூல் மட்டும் இவ்வளவா..?..” – கிறுகிறுன்னு வருதே..!

அவதார் 2 முதல் நாள் வசூல் : இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் தியேட்டர் என்ற திரைப்படம் இன்று உலகம் முழுதும் வெளியாகியிருக்கிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் அவதார்.

இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் உலக அளவில் சாதனை படைத்தது. 2009-ம் ஆண்டே 1000 கோடி வசூல் என்ற சாதனையை படைத்தது அவதார்.

தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது. ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கக்கூடிய இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரண்டு மடங்கிற்கு பூர்த்தி செய்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

படத்தின் நீளம் தான் அதிகம் தவிர மற்றபடி படம் ரசிகர்களை எதிர்பார்த்த அளவுக்கு திருப்திப்படுத்தி இருக்கிறது இந்த படம் என்பது ரசிகர்களின் விமர்சனமாக இருக்கின்றது. தொழில்நுட்ப ரீதியாக இந்த திரைப்படம் காலம் தாண்டி பேசப்படும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

டிசம்பர் 16ஆம் தேதி இன்று இந்த திரைப்படம் வெளியாகியிருக்கிறது. நேற்று (டிச.15) சில நாடுகளில் மட்டும் வெளியானது. இந்நிலையில், 16-ம் தேதி முடிவில்.. அதாவது முதல் நாளில் மட்டுமே 81 மில்லியன் டாலர் வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய மதிப்பில் 665 கோடி ரூபாய்களை உலகம் முழுதும் தன்னுடைய முதல் நாளிலேயே இந்த திரைப்படம் வசூல் செய்திருக்கிறது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுதும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் பண வீக்கத்தின் ஏற்ற இறக்கம் காரணமாக 2500 கோடி முதல் 2800 கோடி ரூபாய் வரை செலவாகியுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இதே வசூல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நீடித்தால் தான் போட்ட பணத்தை எடுக்க முடியும் என்ற நிலையில் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது. அதேபோல இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருக்கிறது.

எனவே அடுத்தடுத்த நாட்களில் இந்த திரைப்படம் Break-Even என்று சொல்லப்படும்  பட்ஜெட் மற்றும் வெளியீட்டு செலவு என இரண்டின் செலவையும் சமன் செய்து.. லாபம் என்ற நிலைக்கு எளிமையாக நுழைந்து விடும் என்று கணித்திருக்கிறார்கள்.

டிஸ்னி பிளஸ் நிறுவனம் இந்த படத்தில் தன்னுடைய மொத்த முதலிடத்தையும் போட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியா..? தோல்வியா.? என்பது தான் டிஸ்னியின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியதாக இருக்கும் என்பது கூடுதல் தகவல்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …