அவதார் இரண்டு தமிழில் வெளிவருவதில் சிக்கலா? தியேட்டர் ஓனர்களுக்கு வைக்கப்பட்ட செக்…!!

 ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அவதார். யாருமே யோசிக்க முடியாத அளவு மிகப்பெரிய பிரம்மாண்டமான கதை களத்தைக் கொண்டிருந்த இந்த படம் வசூலில் சாதனை புரிந்தது. மேலும் 3 ஆஸ்கார் விருதுகளை வென்றெடுத்தது.

 இதனை அடுத்து இந்தப் படத்தின் இரண்டாவது பகுதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்று 160 மொழிகளில் வெளிவர உள்ளது. வரும் டிசம்பர் 16ஆம் தேதி திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்தின் டிரைலரை பட குழு வெளியிட்டு அசத்தியது.

 இந்த அவதார் இரண்டாவது பாகம் 3d தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களின் கவனத்தை இது திரும்ப  இருக்கிறது. எனினும் திரைக்கு வர உள்ள நிலையில் மலையாளத்தில் அவதார் 2 வெளி ஆவதில் சிக்கல் ஏற்பட்டு திரையரங்கு உரிமையாளர்களிடம் விநியோகிஸ்தர்கள் அதிக ஷேர் கேட்டு வந்தார்கள்.

 இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் இதுபோலவே தமிழில் வெளிவர இருக்கும் அவதார் 2 திரைப்படத்திற்கும் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

தமிழில் டப்பிங் செய்யும் விநியோக நிறுவனம் தியேட்டர் உரிமையாளர்களிடம் அதிக பங்குத் தொகையை தற்போது கேட்டு வருவதால் அந்த அளவு பணத்தை கொடுத்து வாங்க அவர்கள் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்.

 எனவே தமிழ் மற்றும் மலையாளத்தில் இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனினும் 13 நாட்களை உள்ள நிலையில் சமூக பேச்சுவார்த்தை நடந்த எந்த படம் வெளிவர அதிக வாய்ப்புகள் உள்ளது என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் வித்தியசமான கதையம்சத்தை கொண்டிருக்கும் இந்த படம் ரசிகர்களை மட்டுமல்ல குழந்தைகளையும் ஆச்சரியத்தில் மூழ்க கூடிய வகையில் இருக்கும்.

 மாபெரும் எதிர்பார்ப்பில் வர இருக்கக்கூடிய இந்த திரைப்படம் அந்த குறித்த நேரத்தில் வெளிவந்தால் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு பேசக்கூடிய பொருளாகி விடுவதோடு வசூலையும் வாரி அள்ளித் தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …