“என்னங்கடா.. அவதார் 2-ன்னு சொல்லிட்டு.. மாயாண்டி குடும்பத்தார்-ஐ எடுத்து வச்சிருக்கீங்க…” – ரசிகர்கள் விமர்சனம்…!

உலக சினிமா வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் அவதார் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் உலகசினிமா வரலாற்றையே மாற்றி எழுதியது.

கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூலை செய்தது கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆகியும் இந்த படத்தின் வசூலை எந்த படமும் முறியடிக்கவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தை டிஸ்னி நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. இந்த படம் எந்தளவுக்கு வசூலிக்கிறது என்பதை பொறுத்துதான் டிஸ்னி எதிர்காலமே அடங்கி இருக்கிறது என்பதுதான் உண்மை. உலகம் முழுதும் 160 மொழிகளில் 52 ஆயிரம் திரையரங்குகளில் இந்த திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தின் முன்பதிவு மட்டுமே மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டின் முன்னணி நடிகர்கள் படம் வெளியாகும் அளவுக்கு அதிகாலை காட்சி முதல் சிறப்பு காட்சிகள் வரை என இந்த படத்தின் வியாபாரம் மிளகாய் பஜ்ஜி கணக்காக பறந்து கொண்டு இருக்கிறது.

அவதார் படத்தை பார்த்து அந்த வியப்பில் இருந்து இன்னும் வெளியே வராமல் இருக்கும் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க காத்திருக்கிறார்கள். இந்நிலையில், இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை நாம் இங்கே பார்க்கலாம்.

ரசிகர் 1 : மூன்று மணி நேரம் வேறு உலகத்தில் இருப்பது போன்ற உணர்வு எங்களது கிடைத்தது. அனைத்து கதாபாத்திரங்களையும் ரசித்தேன். இதைவிட சிறந்த இயக்கம் உள்ள திரைப்படத்தை இனிமேல் பார்க்க முடியுமா.. அல்லது தயாரிக்க முடியுமா..?என்ற சந்தேகம் எழுகிறது.

ரசிகர் 2 : இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் நான் காத்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ரிலீசாகும் என்று தேடிக்கொண்டே இருப்பேன். தற்பொழுது அந்த தேடலுக்கு விடை கிடைத்திருக்கிறது. இந்த திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்னுடைய எதிர்பார்ப்பை இரண்டு மடங்கு பூர்த்தி செய்துள்ளார்கள். நிச்சயம் இது அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும்.

ரசிகர் 3 : இந்த படத்தை பார்த்து வியந்து போனேன் படத்தின் காட்சிகளை பார்க்கும்போது எந்த அளவுக்கு படக்குழுவினர் தங்களை இந்த படத்துடன் இணைந்துக்கொண்டிருகிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், படத்தின் நீளம் தான் அதிகமோ என்று தோன்றுகிறது. சொல்லப்போனால் மாயாண்டி குடும்பத்தார் போலவே கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் உக்கார்ந்து பார்க்க வேண்டும். படத்தின் நீளத்தை சற்று குறைத்திருந்தால் நிச்சயம் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ரசிகர் 4 : இந்த படத்திற்க்கான காத்திருப்பை ஒரு தவம் என்றே கூற வேண்டும். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த படத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். இன்று இந்த படத்தை பார்த்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.  காலை காட்சியை பார்த்து விட்டேன். படம் பிரமாண்டமாக உள்ளது. மீண்டும் மதியம் ஒரு காட்சிக்கு டிக்கெட் எடுத்து வைத்துள்ளேன். மதியமும் இந்த படத்தை காண ஆவலுடன் இருக்கிறேன் என்று தன்னுடைய மேட்னி ஷோ டிக்கெட்டை காட்டி மகிழ்சியில் திளைக்கிறார்.

ரசிகர் 5 : முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிரமாண்டமான உள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி இதுவரை பார்த்திடாத யூகிக்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

ரசிகர் 6 : படத்தின் காட்சிகளுக்கு ஏற்ப படத்தின் பின்னணி இசை மிரட்டுகிறது. வாழ்நாள் அனுபவமாக கருதுகிறேன். விஷுவல் ட்ரீட் என்று தான் கூற வேண்டும். நான் பார்த்துவிட்டேன். மீண்டும், என் குடும்பதினருடன் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …