டிசம்பர் மாதத்தில் எந்த பழமும் வெளிவராது … ஏனெனில் அவதார் 2 பயந்து இருக்கும் திரை உலகம்…!

 கடந்த 2009 ஆம் ஆண்டு ரசிகர்களை மிரள வைத்த கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அவதார் படம் பற்றி உங்களுக்கு கூற வேண்டிய அவசியம் இல்லை. அந்த காலகட்டத்திலேயே பல புதிய தொழில்நுட்பங்களை கையாண்டு வந்து பல சாதனைகளை செய்த படமாக இது விளங்கியது.

 மேலும் இந்தப் படம் அதிக விருதுகளை வாங்கி குவித்ததோடு மட்டுமல்லாமல் மேலும் ஐந்து பாகங்களாக இந்த படம் வெளிவரும் என்ற அறிவிப்பை கேட்டு ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதனை அடுத்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் அடுத்த கட்ட பாகம் வெளிவந்திருப்பதை அடுத்து ரசிகர்கள் மிக மிக சந்தோஷத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.

 கடந்த வருடமே வெளிவந்திருக்கக் கூடிய இந்த படம் தற்போது வெளிவருவதை எண்ணி ரசிகர்கள் குஷி ஆகிவிட்டார்கள். கொரோனா தாக்கத்தால் இந்த படம் வெளிவருவது தாமதம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை அடுத்து இரண்டாம் பாகத்தின் டிரைலரை எதிர்நோக்கிக் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று அந்த பிராய்லர் வெளிவந்து ரசிகர்களின் ஆக்கபூர்வமான சிந்தனையை கிளறி விட்டிருக்கிறது.

 தற்போது எந்த ட்ரெய்லரானது ரசிகர்களின் ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்ல உள்ள நிலையில் கண்கவரும் அற்புதமான காட்சிகளும் யோசித்துப் பார்க்காத விசுவல் கிராபிக்ஸர்களும் நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 நீருக்கடியில் இப்படி ஒரு அற்புதமான உலகத்தை யாரும் யோசித்துப் பார்க்க முடியாது. அங்கு உள்ள வித விதமான மீன்கள், வித்தியாசமான பறவைகள் என்று இவர்கள் காட்டியிருக்கும் காட்சி ஒரு வித்தியாசமான உலகிற்கு தான் நம்மை அழைத்துச் செல்கிறது.

 இதனை அடுத்து கண்டிப்பாக இந்த படத்தோடு எந்த படமும் நின்று போட்டியிட முடியாது என்பதை உணர்ந்து டிசம்பர் மாதம் எந்த படமும் வெளிவராது என்று தான் தோன்றுகிறது.

மேலும் பட்டையை கிளப்பும் இந்த படத்தை பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது மட்டும் தற்போது உறுதியாகிவிட்டது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …