அவல் மில்க் ஷேக்

சிவப்பு அரிசி ரகங்களிலிருந்து தயாரிக்கப்படும் அவலில்  ஆந்தோசயனின் என்னும் நிறமி அவலின் சிவப்பு நிறத்துக்குக் காரணம். 

சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் நல்லது.

இந்த அவலினை கொண்டு அவல் உப்புமா அவல் பாயசம் அனைத்தும் செய்வார்கள்.நாமும் அதை சுவைத்து இருப்போம்.

அதே அவலினை கொண்டு வீட்டிலேயே மில்க் ஷேக் செய்வது எப்படி என பார்ப்போம்.

அவலின் வகைகள்

கருப்பு கவுனி அரிசியில் செய்த அவல், சிகப்பு அரிசி அவல், மாப்பிள்ளை சம்பா அரிசி அவல், குதிரைவாலி அரிசி அவல், தினை அரிசி அவல், சாமை அவல், வரகு அவல், கம்பு அவல் என்று தானிய வகைகளிலும் அங்காடிகளில் அவல் கிடைக்கிறது

தேவையான பொருட்கள்:

  • சிவப்பு அவல் – 1 கப்
  • சர்க்கரை – 31/2 tbsp
  • ஹார்லிக்ஸ் – 20 கிராம்
  • பால் – 1/2 லிட்டர்
  • வாழைப்பழம் – 2
  • மாம்பழம் – 1/4 கப்
  • வேர்க்கடலை – 1/2 tsp
  • முந்திரி – 1/2 tsp

செய்முறை :

அவலை வறுத்து எடுத்து கொள்ளுங்கள். வாழைபழம் மற்றும் மாம்பழத்தை தனித்தனியே மசித்து கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் பால் , சர்க்கரை, ஹார்லிக்ஸ் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.

ஒரு கிளாசை எடுத்து அதில், மசித்து வைத்துள்ள வாழைப்பழம் மற்றும் மாம்பழத்தை 2 ஸ்பூன் சேருங்கள்.பின்பு மேல் வறுத்து வைத்துள்ள அவலை 4 ஸ்பூன் சேருங்கள் வறுத்த முந்திரி மற்றும் வேர்க்கடலையை தேவையான அளவு சேருங்கள்,

கடைசியாக அதில் அரைத்து வைத்துள்ள பாலை சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …