“இனி சமையலறையில் இந்த பொருட்களுக்கு பை பை சொல்லுங்க..!” – ஆரோக்கியத்தை அள்ளுங்க..!

ஒவ்வொரு வீட்டு சமையலறை தான் அவர்களின் ஆரோக்கியத்தை அள்ளித் தருகின்ற இடமாக உள்ளது என்றால் அது உண்மையான ஒன்றுதான். அந்த சமையல் அறையில் நாம் தற்போது பயன்படுத்தி வரும் சில பொருட்களால் ஆபத்துக்கள் ஏற்படுகின்றது.

Unhealthy things in Kitchen

அப்படி நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தி தரக்கூடிய அந்த பொருட்களை இனி மேல் உங்கள் சமையலறையில் நுழைய விடாதீர்கள்.

சமையல் அறையில் இருந்து ஆரோக்கியத்தை கெடுக்கும் பொருட்கள்

  1. வெள்ளை சர்க்கரை
  2. ரீபைண்ட் ஆயில்
  3. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள்
  4. டின்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஜூஸ் வகைகள்

1.வெள்ளைச் சர்க்கரை

இன்று ஆரோக்கியத்திற்கு உலை வைக்கக்கூடிய அளவு நமது சமையல் அறையில் நின்று வேலை செய்யக்கூடிய பொருளாக  வெள்ளை சர்க்கரை உள்ளது. இதில் இருக்கக்கூடிய ரசாயன பொருட்கள் நமக்கு விரைவில் புற்றுநோய் முதல் நீரிழிவு நோய் வரை ஏற்படுத்தித் தரக்கூடிய தன்மை கொண்டது.

Unhealthy things in Kitchen

 எனவே வெள்ளை சர்க்கரை பயன்பாட்டை அறவே ஒழித்துக் கட்டிவிட்டு இரும்புச்சத்தை அள்ளித் தரும் பனைவெல்லம், வெல்லம், நாட்டுச்சக்கரை போன்றவற்றை பயன்படுத்த மறக்காதீர்கள்.

2.ரீபைண்ட் ஆயில்

நமது பாரம்பரிய எண்ணெய்களை புழக்கத்திலிருந்து நீக்கிவிட்டு யாரோ சொன்னார்கள் என்ற மோகத்தில் ரீபைண்ட் ஆயில் பயன்பாட்டை அதிகரித்ததின் விளைவாகத்தான் மூட்டு வலி மற்றும் எண்ணற்ற வியாதிகளின் கூடாரமாக நாம் மாறிவிட்டோம். எனவே இனிமேல் ரீபண்ட் ஆயில் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு நமது பாரம்பரிய தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றை தரமான முறையில் நீங்களே தயாரித்து பயன்படுத்தி பாருங்கள்.

3.பதப்படுத்தப்பட்ட உணவுகள்

நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய் என்று தினமும் சுடச்சுட நாம் உணவை சமைத்து சாப்பிடுவதை தவிர்த்து சோம்பேறித்தனமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை சமைத்து சாப்பிடுவதின் மூலம் பல வியாதிகள் நமக்கு ஏற்படுகிறது.

Unhealthy things in Kitchen

 இதன் மூலம் நமது இளம் தலைமுறை பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து இனிமே பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு பை, பை சொல்லி விட்டு உங்கள் வீட்டில் பிரசாக உணவை சமைத்து சாப்பிடலாம்.

4.டின்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஜூஸ்

டின்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஜூஸ் வகைகளில் அதை கெடாமல் பாதுகாத்து வைப்பதற்காக பல வேதிப்பொருட்கள் கலந்து இருப்பதோடு சர்க்கரையும்  அதிகளவு இருக்கும். இதனைத் தொடர்ந்து நாம் குடிப்பதின் மூலம் எண்ணற்ற பக்க விளைவுகள் நமது உடலுக்கு ஏற்படும்.

Unhealthy things in Kitchen

எனவே இதை தவிர்த்து விட்டு பிரஷ்ஷாக இருக்கக்கூடிய படங்களை நீங்கள் அப்படியே உண்பது மிகவும் சிறப்பாக இருக்கும்.

மேற்கூறிய இந்தப் பொருட்களை நீங்கள் உங்கள் சமையலறையில் இருந்து வெளியேற்றி விட்டாலே மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …