சனிக்கிழமை – மறந்து கூட இந்த பொருட்களை வாங்கிடாதிங்க..!

சாஸ்திரப்படி சனிக்கிழமையானது மிகவும் மோசமான நாளாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. இதனை அடுத்து சனிக்கிழமை சில பொருட்களை நீங்கள் வாங்கிக் கூடாது. அது எந்தெந்த பொருட்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

கட்டாயம் நீங்கள் இதை தெரிந்து கொண்டால் துரதிஷ்டம் தரக்கூடிய அந்த பொருட்களை உங்கள் வீட்டுக்கு சனிக்கிழமை அன்று வாங்கி வருவதை உடனடியாக தவிர்த்து விடுவீர்கள்.

 சனிக்கிழமையன்று சனி பகவானுக்கு உகந்த நாள் என்பது அனைவருக்குமே தெரியும். எனவே அவரது கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பது அனைவரின் கடமையாகும்.

அதுமட்டுமல்லாமல் அவர் கோபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள இந்த பொருட்களை நீங்கள் வாங்குவதை தவிர்த்து விடுங்கள்.

தவிர்க்க வேண்டிய பொருட்கள்:

சனிக்கிழமை அன்று இரும்பு பொருட்களை வாங்குவது அசுபமாக சொல்லப்பட்டுள்ளது. இரும்பை வீட்டுக்கு கொண்டு வரக்கூடாது. உங்கள் குடும்ப உறவுகளை இது பாதிப்பதோடு மட்டுமல்லாமல் துரதிஷ்டத்தையும் உங்களுக்கு வழங்கும்.

ஆனால் அந்த கிழமை நீங்கள் இரும்பு பொருட்களை தானம் செய்தால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். மேலும் சனிக்கிழமை அன்று உப்பு வாங்கினால் நஷ்டம் ஏற்படுவதோடு கடன் சுமையும் அதிகரிக்கும்.

எனவே பொருளாதாரத்தில் நலிந்து இருக்கக்கூடிய குடும்பங்கள் சனிக்கிழமை தயவு செய்து வீட்டில் உப்பை வாங்கிக் கொண்டு வராதீர்கள். மேலும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இது வியாபாரத்தை குறைக்கக்கூடிய தன்மையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கடனையும் அதிகரிக்கும்.

 இதனால் நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் அதுவும் நட்டத்தில் முடியலாம். அதுமட்டுமல்ல சனிக்கிழமை அன்று கடுகு எண்ணெய், தாவர எண்ணெய் என்று எந்தவிதமான எண்ணெய் வஸ்துக்களையும் வீட்டுக்கு வாங்கி வருவதை தவிர்த்து விடுங்கள்.

 அவ்வாறு வாங்கி வருவதினால் உங்களுக்கு நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய எண்ணெய் வஸ்துக்களை சனிக்கிழமை வீட்டுக்கு எடுத்துச் செல்லாதீர்கள்.

 அப்படி சென்றால் உங்களால் நோயின் தாக்கத்தை அதிகரிக்க தான் முடியுமே ஒழிய குறைக்க முடியாது. ஆடை விஷயத்தைப் பொறுத்தவரை சனிக்கிழமை கருப்பு அணிந்தால் நன்மை என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.

மேலும் கருப்பு நிற ஷூவை அணிவது உங்களுக்கு தோல்வியை தரக்கூடியது அதுமட்டுமல்லாமல் நீங்கள் வாங்கக்கூடிய எந்த பொருளிலும் பொருளிலும் கருப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது இதன் மூலம் உங்களுக்கு சனி தோஷம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam