இதனால் தான் அவ்வை சண்முகி படத்தில் சிவாஜி நடிக்கவில்லை.. கே.எஸ்.ரவிக்குமார் கூறிய அதிர்ச்சி தகவல்..!

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் பல வெற்றிப்படங்களை தந்திருக்கிறார். சமீபமாக குணச்சித்திர வேடங்களில் அதிகமாக கேஎஸ் ரவிக்குமார் நடித்தும் வருகிறார்.

தமிழ் சினிமா இயக்குநராக ரஜினிகாந்த் நடித்த படையப்பா, முத்து. கமல் நடித்த அவ்வை சண்முகி, சரத்குமார் நடித்த சேரன் பாண்டியன், நாட்டாமை என அவரது சில படங்கள் தமிழ் சினிமாவில் மிகவும் பேசப்பட்ட ஹிட் படங்களாக அமைந்தன.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் படங்களில், ஏதேனும் ஒரு காட்சியில் அவர் தோன்றி விடுவார். தான் இயக்கும் படங்களில் கேமியோ ரோலில் வந்துவிடும் ஒரே இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

அவ்வை சண்முகி

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1990களின் பிற்பகுதியில் வெளியான படம் அவ்வை சண்முகி. கமல்ஹாசன், மீனா, ஜெமினி கணேசன், நாகேஷ், மணிவண்ணன், நாசர், டெல்லி கணேஷ், ஹீரா என முக்கிய நட்சத்திரங்கள் நடித்த இந்த படம் பெரிய வெற்றிப் படமாக இருந்தது.

இந்த படத்தில் வசதியான வீட்டு பெண் ஜெமினி மகள் மீனாவை, டான்ஸ் மாஸ்டர் அசிஸ்டெண்ட் கமல், காதலித்து திருமணம் செய்துக்கொள்வார்.

ஒரு பெண் குழந்தைக்கு தாயான பின், வசதி இல்லாத கமலுடன் வாழ விரும்பாத மீனா, அவரை விவாகரத்து செய்துவிட்டு தந்தை வீட்டில் வாழ்வார்.

மாமி வேடத்தில் கமல்

அப்போது, தன் மகளை பார்த்துக்கொள்ள மாமி வேண்டும் என, நாளிதழில் விளம்பர தர, அந்த மாமியாக பெண் வேடத்தில், தன் மகளை கவனித்துக்கொள்ள கமல்ஹாசன் அங்கு, அவ்வை சண்முகியாக செல்வார்.

கமல்ஹாசனை பெண் வேடமிட்டு அங்கு அனுப்புபவர் மேக்கப் மேன் நாகேஷ். அங்கு அவ்வை சண்முகி மீது, ஜெமினி கணேசன் காதல் கொள்வார் என, படம் மிக கலகலப்பாக இருக்கும்.

இந்த படம் குறித்து சில சுவாரசியமான தகவல்களை ஒரு நேர்காணலில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் கூறினார்.

அவர் கூறியதாவது, அவ்வை சண்முகி படத்தில் ஜெமினி கணேசன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நான் நடிக்க அணுகியது நடிகர் சிவாஜியை தான்.
இதயத்தில் பிரச்னை…

அந்த நேரத்தில் அவருடைய மூத்த மகன் ராம்குமார் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்பாவுக்கு இதயத்தில் பிரச்சனை இருக்கிறது. அவருடைய சிகிச்சைக்காக நாங்கள் அமெரிக்கா செல்கிறோம்

கண்டிப்பாக இந்த படத்தில் அப்பாவால் நடித்து கொடுக்க முடியாது என கூறினார். எனக்கு ஒரே அதிர்ச்சியாகி விட்டது.

ஆனால் சிவாஜி சாருக்கு இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவருடைய உடல்நிலை அதுக்கு சம்மதிக்கவில்லை.

சிவாஜி சொன்ன யோசனை

அதன் பிறகு அவரே, பல பெண்களை காதலிக்க கூடிய பிளேபாய் கதாபாத்திரம் என்றால் கண்டிப்பாக ஜெமினி கணேசனுக்கு தான் அது சூட் ஆகும். அவரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வை என்று கூறினார்.

நான் அவர் சொன்னபடியே செய்தேன். சிவாஜி சொன்ன யோசனையில் எடுக்கப்பட்ட படமும் அருமையாக வந்தது என கூறியுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.

உண்மையில் வயதான தோற்றத்திலும் மாமியை காதலிக்கும் அந்த கேரக்டரில், ஜெமினி கணேசன் அந்த படத்தில் அசத்தியிருப்பார்.

உடல் நல பாதிப்பால்தான் அவ்வை சண்முகி படத்தில் சிவாஜி நடிக்கவில்லை என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சிதான்.

என்றாலும், தன் கேரக்டரில் உடனே ஜெமினி கணேசனை நடிக்க சொல்லி யோசித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கிரேட் தான் என்கின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version