“VFX உச்சகட்டம்.. ஆனா, படம் இவங்களுக்கு மட்டும் தான்..” அயலான் படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க..?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி உள்ள திரைப்படம் அயலான்.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இந்த திரைப்படம் தயாரிப்பில் இருக்கிறது. இடையில் சில பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு வேறு சில படங்களில் நடித்து விட்டு வந்து விட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.

கிராமத்து பின்னணி காதல் கதை காமெடி கதை உள்ளிட்ட கதைகளில் மாறி மாறி நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் சமீப காலமாக ஆக்சன் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், சயின்ஸ் பிக்சன் ஜானரில் முதன்முறையாக தடம் பதித்திருக்கிறார். அதில் வெளியாகியுள்ள முதல் திரைப்படம் அயலான்.

இயக்குனர் ரவிக்குமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். நேற்று இன்று நாளை திரைப்படத்தை இயக்கியிருந்த ரவிக்குமார் இந்த படத்தை இயக்கியிருப்பதால் இந்த படத்தின் மீது இயற்கையாகவே எதிர்பார்ப்பு எகிறி கிடந்தது.

இந்நிலையில், வேற்றுகிரகவாசிகளை பின்னணியில் வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ராகுல் பிரித் சிங் நடித்திருக்க இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

இந்த படம் தற்போது சற்று முன்பு வெளியாகி இருக்கிறது படத்தைப் பார்த்து ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் வாருங்கள் பார்க்கலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam