நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இன்று காலை 9 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் அயலான் படம் ரிலீஸானது. கே ஜே ஆர் ஸ்டுடியோ தயாரித்துள்ள இந்த படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். சயின்டிபிக் ஜானரில் உருவாக்கப்பட்ட இந்த படத்தில், ஏலியன் பொம்மை முக்கிய ரோலாக உள்ளது.
இந்த படத்தை பொருத்தவரை முதல் நாள் முதல் காட்சி பார்த்த வகையில், படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ஏஆர் ரகுமானின் பின்னணி இசை, படத்தின் கதை, டெக்னிக்கல் விஎப்எஸ் காட்சிகள் என படத்தில் அதிகமாக பிளஸ் பாயிண்டுகள் உள்ளன.
இதற்கிடையே கடந்த மாதம் 28ம் தேதி கேப்டன் விஜயகாந்த் காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நாட்களில் சிவகார்த்திகேயன் சென்னையில் இருந்தும் தீவுத்திடல் பக்கம் வராமல் தவிர்த்து விட்டார்.
கடந்த 6ம் தேதி தனது மனைவியுடன் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்குச் சென்ற சிவகார்த்திகேயன், பிரமேலதா, சண்முக பாண்டியன், விஜயபிரபாகரன் ஆகியோரை நேரில் சந்த்து, கேப்டன் மறைவுக்கு துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
அதே நேரத்தில் சினிமாவுக்கு வருவதற்கு முன் டிவி காம்பியராக இருந்த காலகட்டத்தில் சாலமன் பாப்பையா, விஜயகாந்த், ரஜினிகாந்த் போல மிமிக்ரி செய்துதான் சிவகார்த்திகேயன் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார். அதைத்தொடர்ந்து சினிமாவிலும் அவர் நடித்த போது தெரிந்த செலிபரட்டியாக இருந்ததால், மிக விரைவில் நடிகராகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது, சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தில் டைட்டில் கார்டில் விஜயகாந்தின் இளமைக்கால புகைப்படத்துடன் என்றும் நினைவுகளுடன் கே ஜே ஆர் அண்ட் பேமிலி, சிவகார்த்திகேயன் அண்ட் பேமிலி, டீம் அயலான் என உருக்கமாக மரியாதை செய்து கேப்டனை அயலான் படக்குழு கௌரவப்படுத்தியுள்ளது. இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.