“அந்த பட நடிகையுடன் தன்னை ஒப்பிட்ட தொகுப்பாளர் அஸார்..” எதிர்நீச்சல் மதுமிதா கொடுத்த பதிலை பாருங்க..

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு தொடராக இருக்கிறது. இது 5 பெண்களை மையப்படுத்திய கதையாக இருப்பதால், பெண்கள் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ளது.

பெண்களின் கதை

20 ஆண்டுகளுக்கு முன், இதே போல் 5 பெண்களை பெற்ற ஒரு திருமண தரகரின் கதையாக, மெட்டி ஒலியை எடுத்து மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றவர் மெட்டி ஒலி சீரியல் இயக்குநர் திருமுருகன்.

அவரது மெட்டி ஒலி சீரியலில் பணிபுரிந்த திருச்செல்வம் இயக்கும் சீரியல்தான் எதிர்நீச்சல்.

இந்த சீரியலில் நாயகியாக மதுமிதா, ஹரிப்பிரியா இசை, சத்யப்பிரியா, பிரியதர்ஷினி, மோனிஷா, கனிகா, பாரதி கண்ணன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

ஆதி குணசேகரன் கேரக்டரில்…

இதில் மிக முக்கிய கேரக்டரில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்த நடிகர் மாரிமுத்து, காலமாகி விட்டதால் அவரது கேரக்டரில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார்.

பொதுவாக பெண்களை மையப்படுத்தி கதைகள் என்றாலே, வீட்டில் இருக்கும் பெண்கள் மத்தியில் எளிதாக வரவேற்பை பெற்றுவிடும். குடும்ப கதைகளில் உள்ள உறவுகளின் பிணக்குகளை பார்த்து ரசிப்பதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவர்.

அதனால் எதிர்நீச்சல் சீரியலில் ஆணாதிக்கத்தையும் அதனால் பெண்கள் சந்திக்கும் குடும்ப சிக்கல்களையும் மையக்கருவாக கொண்டிருந்ததால் நல்ல வரவேற்பு எதிர்நீச்சலுக்கு கிடைத்து வருகிறது.

 

மதுமிதா

இதில் முக்கிய கேரக்டரில் நாயகியாக நடித்து வரும் மதுமிதா, கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர்.

ஜெய்ஹனும் என்ற கன்னட தொடரில் நடித்து டிவி சீரியலில் அறிமுகமானவர். அடுத்து மனசுனா மனசை என்ற தெலுங்கு சீரியலில் நடித்தார்.

அடுத்து ஜீ தமிழ் சேனலில் பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியலில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

இப்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து, தமிழக மக்கள் மத்தியில் பரவலான கவனிப்பை பெற்ற நடிகையாக இருந்து வருகிறார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் அஸார்

இதில் சன்டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அஸார், எதிர்நீச்சல் நாயகி மதுமிதா குறித்து கருத்து தெரிவித்திருப்பது, வைரலாகி வருகிறது.

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவை ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிஃபர் லோபஸ் உடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார் தொகுப்பாளர் அசார் இதனை பார்த்த மதுமிதா ஐயையோ என்று பதில் கொடுத்துள்ளார்.

ஹாலிவுட் பட நடிகையுடன் தன்னை ஒப்பிட்ட தொகுப்பாளர் அஸாருக்கு, எதிர்நீச்சல் மதுமிதா, ஐயையோ என்ற அதிர்ச்சியை பதிலாக பதிவு செய்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version