ராதிகாவுக்கு புருஷனா நடிச்சு என் வாழ்க்கையே போச்சு.. புலம்பும் பிரபல நடிகர்..! யாருன்னு பாருங்க..!

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர்கள் பல பின்னாளில் ஹீரோவாக மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் 1971-ஆம் ஆண்டு வெளி வந்த நான்கு சுவர்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் தான் பப்லு பிரித்விராஜ்.

தற்போது 58 வயதை தொட்டிருக்கும் பப்லு சினிமாவில் சாதிக்க விரும்பி இருந்தாலும் அவரால் போதுமான அளவு வெற்றியை ஈட்ட முடியாத நிலையில் சீரியல்களிலும் நடித்து ரசிகர்கள் பலரைப் பெற்றிருக்கிறார்.

ராதிகாவிற்கு புருஷனா நடிச்சு..

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் சிறு வயதில் இருந்து நடிக்க ஆரம்பித்த இவர் அண்மையில் சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியலில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

மேலும் சில வருடங்களுக்கு முன்பு இவரை பற்றிய சர்ச்சையான விஷயங்கள் இணையத்தில் வெளி வந்தது. அதில் 58 வயதாகும் இவர் 24 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறித்து சர்ச்சைகள் வெடித்தது.

பொம்பள சோக்கு கேக்குது என்று பலரது முகம் கூசக்கூடிய வகையில் பேசி இவருடைய பெயரை டேமேஜ் செய்து கொண்ட இவரது திருமணமும் நீண்ட நாள் நிலைத்து நிற்கவில்லை.

இந்நிலையில் நடிகர் பப்லு பிரித்விராஜ் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய விஷயமானது ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் ராதிகாவிற்கு புருஷனாக தான் நடித்தது தான் தன் வாழ்க்கையில் தான் செய்த மிகப்பெரிய தப்பு என்று பப்லு புலம்பியதுதான்.

பப்லு ஏன் அப்படி புலம்பினார்.. இதற்கான காரணம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

என் வாழ்க்கையே போச்சு..

பிரித்விராஜ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் தன் நடிப்பின் மூலம் பலரைக் கவர்ந்த பப்லு பிரித்விராஜ் வாணி ராணி சீரியலில் நடிகை ராதிகாவிற்கு கணவராக நடித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

மேலும் நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத முன்னணி நடிகையாக இருந்தவர். அத்தோடு இவர் ஓர் அவ்வையார் இவருக்கு 100 வயது இருக்குமா? என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் நான் அவருக்கு கணவராக வாணி ராணி சீரியலில் நடித்து இருந்தேன். இது பற்றி ஒருவர் என்னை பார்த்து விமர்சனம் செய்திருக்கிறார்.

அதுவும் எங்கு தெரியுமா? என்று பப்லு பிரித்விராஜ் புலம்பினார். அப்படி அவர் புலம்ப புலம்பலுக்கான காரணம் இதுதான்

புலம்பும் பிரபல நடிகர் யார் தெரியுமா?

இவரும் ரியாஸ் தானும் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போது அவர்களைப் பார்த்து பலரும் பாராட்டினார்கள். ஆனால் என்னை பார்த்து தாத்தா என்று ஒருத்தன் கலாய்த்தார்.

 

இதனை அடுத்து நீ யாரைப் பார்த்து தாத்தா என்று கலாய்க்கிறாய் என்று கேட்டதற்கு அவன் ராதிகாவிற்கு புருஷனாக நடித்தவன் நீதானே என அந்த நபர் கமெண்ட் அடித்து விட்டு போனதாக பப்லு புலம்பி தீர்த்து இருக்கிறார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version