பப்லு முதல் மனைவி யார் தெரியுமா.. 9 ஆண்டு காதலுக்கு செய்த துரோகம்.. வேதனை பக்கங்கள்..

நடிகர் பப்லு பிருத்விராஜ், சமீபத்தில் தன்னை விட 24 வயதுகள் குறைந்த இளம்பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்தது, சமூக வலைதளங்களில் வைரலானது. ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டதாகவும் தெரிய வந்தது.

ஏற்கனவே திருமணமாகி, முதல் மனைவி உள்ள நிலையில் அவரை விட்டு பிரிந்து இருந்த பப்லு, இந்த இளம்பெண்ணை தன்னுடன் சேர்த்துக்கொண்டு ஒரே வீட்டில் குடும்பம் நடத்திய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

பப்லு

நடிகர் பப்லு பல படங்களில் நடித்திருக்கிறார். இளம் சிறுவனாக, நாளை நமதே படத்தில், சின்னவயது எம்ஜிஆராக நடித்தது பப்லுதான். அதன்பிறகு வானமே எல்லை படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

தொடர்ந்து பாண்டியநாட்டு தங்கம், அவள் வருவாளா போன்ற பல படங்களில் பப்லு நடித்தார்.

முதல் மனைவி பீனா

பப்லுவுடன் முதல் மனைவி பெயர் பீனா. இவரும், பப்லுவும் சைல்டு வுட்ஸ் பிரண்ட்ஸ். அதாவது சின்ன வயதில் சிறுவன், சிறுமியாக இருக்கும்போதே ஒருவரை ஒருவருக்கு தெரியும். தோழன், தோழியாக 28 ஆண்டுகளாக இருவரும் பழகியுள்ளனர்.

9 ஆண்டுகளாக…

இருவரும் ஒன்றாக வெளியில் செல்வது, ஒன்றாக சாப்பிடுவது என ஒன்றாய் பழகிய அந்த காலகட்டத்தில் இருவரும் 9 ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.

இந்த சூழலில் வசதியான பெண்ணாக பார்ப்போம், பீனாவை திருமணம் செய்ய வேண்டாம் என பப்லு வீட்டிலும், பப்லு ஒரு நடிகர். கடைசியில் ஏமாற்றி விட்டு சென்றுவிடுவார்.

நாங்களே நல்ல பையனாக பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என, பீனா வீட்டிலும் கூறியிருக்கின்றனர்.

இருவரது வீட்டிலுமே இவர்களது காதல் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எதிர்ப்புதான் கிளம்பியுள்ளது.

பப்லு – பீனா திருமணம்

ஆனால் இதையெல்லாம் மீறி கடந்த 1994ம் ஆண்டில் பப்லு – பீனா திருமணம் நடந்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் ஆண் மகன் பிறந்துள்ளான்.

சினிமாவில் பிஸியாக இருந்த பப்லு, மனைவி மற்றும் மகன் மீது அதிக ஆர்வம் காட்டவில்லை.

இதையும் படியுங்கள்:  விவாகரத்து.. சக்காளத்தியான தோழி.. முதுகில் குத்திய மகள்.. பறிபோன வாழ்க்கை .. மஞ்சு வாரியர் மறுபக்கம்..

ஆட்டிசம் நோயால்…

ஒருகட்டத்தில் பையன் பேசாமல், ஒரு மாதிரியாக இருந்த நிலையில் டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்த போது, பப்லு மகன் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டிருந்த உண்மை தெரிய வந்தது.

அப்போது பெரிய நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் பொறுப்பில் இருந்த பீனா, அந்த வேலையை விட்டுவிட்டு, மகனுக்கு ஏற்பட்டுள்ள ஆட்டிசம் நோய் பற்றி தெரிந்துக்கொள்ள, அதுபற்றி ஆராய்ச்சி செய்ய டெல்லியில் உள்ள கல்வி நிறுவனத்தில் இந்த நோய் குறித்து படித்துள்ளார்.

30 ஆண்டுகால நட்பு

தன் மகனின் எதிர்காலம், உடல் நலம் என பீனா இருந்த நிலையில், 9 ஆண்டுகள் கழித்து அவரை விட்டு பிரிந்திருக்கிறார் பப்லு. அதே நேரத்தில் 30 ஆண்டு கால நட்பையும் வெட்டி விட்டிருக்கிறார் பப்லு.

மகன் மீது மட்டுமே அதிக அக்கறை, அன்பு, கவனம் காட்டிய என் மனைவி, என் மீது அக்கறை செலுத்தவில்லை. அதனால் தனிமையில் தவித்த நான், 6 ஆண்டுகள் வரை அவரை விட்டு பிரிந்து வாழ்ந்தேன்.

அதனால் என சொந்த வீட்டை மகனுக்கும், மனைவிக்கும் கொடுத்துவிட்டு, தனியாக வாடகை வீட்டில் வசிக்கிறேன்.

துணை எனக்கு தேவை

இப்போதும் ஒரு துணை எனக்கு தேவையாக இருப்பதால் ஷீத்தல் என்ற இந்த பெண்ணுடன் சந்தோஷமாக வாழ்கிறேன் என ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் பப்லு பிருத்விராஜ்.

பப்லு முதல் மனைவி பீனாவுடன் 30 ஆண்டு கால நட்பு, 9 ஆண்டு காதலுக்கு செய்த துரோகம் என அவரது வேதனை பக்கங்கள் இருந்தாலும், ஆட்டிசம் பாதித்த தன் மகனுக்காக, ஒரு தாயாக அவர் தனது வாழ்க்கையை தியாகம் செய்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:  200 கோடி செலவில் விஜயகுமாரின் பேத்தி திருமணம்.. வரதட்சணை மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

ஆனால் பெண் சுகத்துக்காக தன் தந்தை உணர்வை மறந்து செயல்பட்டிருக்கிறார் பப்லு. ஆனால் இப்போது அவர் 2வது மனைவி ஷீத்தலை பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version