11 வருஷம் கழித்து குழந்தை.. ஆனால்.. இதை மட்டும் யாரும் பண்ணாதிங்க.. காயத்ரி யுவராஜ் உருக்கம்..!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் நடிகையாக தற்போது பார்க்கப்பட்டு வருபவர் தான் காயத்ரி யுவராஜ்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான “தென்றல்” என்ற தொடரில் நடித்து முதன் முதலில் நடிகையாக அறிமுகமாகி இருந்தார்.

சீரியல் நடிகை காயத்ரி:

சென்னையை சேர்ந்த இவர் தொலைக்காட்சிகளில் நடித்ததன் மூலம் ஆக பேரும் புகழும் ஏற்படுத்திக்கொண்டார் .

இவர் யுவராஜ் என்ற நடன மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். யுவராஜ்சொந்தமாக நடன பள்ளி ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

காயத்ரி தென்றல், அழகிய பொன்னூஞ்சல், பிரியசகி ,மெல்லத் திறந்தது கதவு , சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சில பிரபலமான பல்வேறு பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றிருக்கிறார்.

பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்ட இவர் காயத்ரிக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறான். மகன் பிறந்து கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு கழித்து அண்மையில் தான் அழகிய பெண் குழந்தை ஒன்று பெற்றெடுத்தார் காயத்ரி.

11 வருடங்கள் கழித்து மகள்:

பல வருடங்கள் கழித்து இந்த தம்பதி குழந்தை பெற்றுக் கொண்டதை பலர் விமர்சித்தனர். தோளுக்கு மேல் மகன் வளர்ந்திருக்கும் நேரத்தில் இப்போது குழந்தை அவசியமா? என அவர்களை பலரும் விமர்சித்து ட்ரோல் செய்தனர் .

ஆனால், அதைப் பற்றி எல்லாம் காயத்திரி கண்டு கொள்ளாமல் தன்னுடைய மிகுந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

மகள் பிறந்த பிறகு காயத்ரி புது வீடு ஒன்றைக் கட்டி பிரம்மாண்டமாக குடிப்பெயர்ந்தார். இந்த நிலையில் திடீரென்று மக்களிடம் ஒரு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்து இருக்கிறார் நடிகை காயத்ரி .

அது என்னவென்று தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். என்னுடைய மகன் பிறந்த பிறகு நாங்கள் இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி யோசிக்கவே இல்லை.

ஏனென்றால் எங்களுடைய முழு அன்பும் அவனுக்கு கிடைக்க வேண்டும் என்று நாங்கள் யோசித்து அந்த முடிவு எடுத்திருந்தோம்.

இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க:

ஆனால் அவன் வளர்ந்த பிறகு அடிக்கடி எனக்கு ஒரு தங்கையோ ஒரு தம்பியோ இல்லை என்று சொல்லிக் கொண்டே இருப்பான் .

அவனுடைய ஏக்கம் எங்களுக்கு புரிய ஆரம்பித்தது. அதனால் இன்னொரு குழந்தை பிறந்தால் அதை அவன் எப்படி பார்த்துக் கொள்வான் என்று நாங்கள் யோசித்துக் கொண்டே இருந்தோம்.

ஆனால், அவன் என்னுடைய மகளை அவ்வளவு அன்பாக பார்த்துக் கொள்கிறார். அவருடைய தங்கை தான் இப்போது அவனுக்கு உயிரே.

ஆம், என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் இருந்து பார்த்துக் கொள்கிறான் என் மகன் அதனால் நாங்கள் அனைவரிடமும் சொல்லிக் கொள்வது ஒரே விஷயம் தான் .

தயவு செய்து ஒரே ஒரு குழந்தையோடு நிப்பாட்டி விடாதீர்கள். ஒரு குழந்தை இன்னொரு குழந்தைக்கு ஆதரவு என அறிவுரை கூறியுள்ளார் காயத்ரி.

நடிகை காயத்ரி அவ்வப்போது தன் சமூக வலைத்தளங்களில் மகன் மற்றும் மகள் விளையாடும் புகைப்படங்களையும் அவர்களின் அழகான வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version