17 வயசுல தன்னை விட 28 வயசு அதிகமான நபரை மணம் முடித்த நடிகை பேபி அஞ்சு..! – மூனே மாசத்துல நேர்ந்த விபரீதம்..!

பேபி அஞ்சு : கடந்த 1978ஆம் ஆண்டு பிறந்த நடிகை பேபி அஞ்சு தன்னுடைய ஒரு வயது முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்ட இவரை பேபி அஞ்சு என்றே அழைக்கின்றனர். தன்னுடைய பத்து வயதிற்குள்ளாகவே 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை பேபி அஞ்சு.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் தனக்கு 17 வயதாக இருக்கும் பொழுது பிரபல நடிகர் டைகர் பிரபாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். (அதாங்க.. முத்து படத்துல வில்லன் போலீஸா நடிசிருப்பரே.. அவரு தான்..)

வெறும் 17 வயதே ஆன நடிகை பேபி அஞ்சு தன்னைவிட 28 வயது பெரியவரான டைகர் பிரபாகர்-ஐ திருமணம் செய்துகொண்டார். அதாவது, தன்னுடைய தந்தையை விட அதிக வயது உடையவர் நடிகர் டைகர் பிரபாகர்.

திருமணம் முடிந்து 4 மாதம் கர்ப்பமாக இருந்த நடிகை பேபி அஞ்சு-வை ஒரு கல்லூரி மாணவர் ஒருவர் சந்திக்க வந்திருக்கிறார். வந்தவர், டைகர் பிரபாகரை பார்க்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

நீங்கள் யார்..?? என்று கேட்டபோது அவரிடம் சொல்லுங்கள் தெரியும் என்று கூறி இருக்கிறார். அதன்பிறகு அங்கு வந்த நடிகர் டைகர் பிரபாகரிடம் யார் இது என்று பேபி அஞ்சு கேட்டிருக்கிறார். அவர், இது என்னுடைய மகன் என்று கூறியிருக்கிறார்.இதனால் அதிர்ந்து போயிருக்கிறார் பேபி அஞ்சு.

அதாவது, பேபி அஞ்சு தனது அப்பாவை விட பெரிய வயதில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு, என்னைவிட வயதில் மூத்த ஒரு மகன் இருக்கிறார். இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது.

என்னுடைய தோழிகள், குடும்பத்தினர் எல்லாம் எதற்காக என்னை திட்டினார்கள் என்று அப்போதுதான் அவருக்கு புரிந்திருக்கிறது. அப்போது, அவருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லையாம்.. மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார் பேபி அஞ்சு.

அப்பொழுது அவருக்கு வயதும் வெறும் 18 தான். அவசரப்பட்டு நாம் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம்.. வாழ்க்கையில் மிகப் பெரிய தவறு செய்திருக்கிறோம் என்று உணர்ந்துள்ளார் பேபி அஞ்சு.

சரி திருமணம் செய்தாகிவிட்டது.. வாழ்க்கையை ஓட்டுவோம் என்று ஓட்டினேன். ஆனால், எனக்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் டைகர் பிரபாகர் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்ற தகவல் எனக்கு தெரியவந்தது.

இனிமேல் இந்த திருமண வாழ்க்கை எனக்கு வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தேன். அதன், பிறகு நிறைய பிரச்சினைகள் நடந்தது. அவரை விவாகரத்து செய்து விட்டேன் என்று தன்னுடைய பேட்டியில் பேசியிருக்கிறார்.

இப்படி நடிகைகள் தன்னுடைய தனிப்பட்ட நிஜ வாழ்க்கை வரலாறுகளை பகிர்ந்து கொள்ளும்போது இன்றைய பள்ளிப் பருவ மற்றும் கல்லூரிப் பருவத்தில் இருக்கும் மாணவிகள் திருமணம் என்றால் என்ன..? அதன் பின்னால் என்னென்ன விஷயங்கள் இருக்கிறது..? என்பதை தெரிந்து கொள்வார்கள்.

வாலிப வயதில் காதல் போன்ற விஷயங்கள் வருவதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், திருமணம் என்று வரும் பொழுது ஒருமுறைக்கு நூறுமுறை நாம் சிந்திக்க வேண்டும். நம்மிடம் பழகும் போது நல்லவராக தெரியும் ஒருவர் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மோசமானவராக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

நம்மிடம் தற்போது பழகும் பொழுது நல்ல சட்டை பேண்ட் அணிந்து கொண்டு இருக்கும் ஒரு நபர் அவர் வீட்டில் கட்டுவதற்கு லுங்கி கூட இல்லாமல் இருக்க வாய்ப்புண்டு.

 

அவருக்கு சொந்த வீடுகூட இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புண்டு. இதையெல்லாம் காதலிக்கும் பொழுது நம்முடைய மனம் எதிர்பார்க்காது. இப்படியான கேள்விகள் அவரை நோக்கி வராது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு வசிப்பதற்கு நல்ல வீடு வேண்டும்.. உடுத்துவதற்கு உடை வேண்டும்.. அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கு வருமானம் வேண்டும்.

இவையெல்லாம் இருந்தால்தான் அந்த திருமணம் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக மகிழ்ச்சியாக நீடிக்கும். காதல் போதையில் பெண்களை மயக்கினால் போதும் என்று திரியும் சில இளவட்டங்கள் தங்களுடைய குடும்பத்தின் ஏழ்மை நிலையை மறைத்து கிடைக்க கூடிய சொற்ப காசில் விலையுயர்ந்த பைக்குகள் ஆடம்பரமான உடைகள், கைப்பேசி போன்றவற்றை வாங்கிக்கொண்டு தங்களை ஒரு வசதியான வீட்டுப் பையன் என்பது போல தோற்றத்தை ஏற்படுத்தி கொள்கிறார்கள்.

அப்படியான வலையில் பெண்களும் சிக்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படி எல்லாம் நடக்கிறது.. இது தவறு.. என்று பொதுவெளியில் பேசினால்.. ஒரு சட்டை.. ஒரு பைக்கு.. ஒரு போன்.. இதை பார்த்து உங்க பொண்ணு மயங்குகிறாள் என்றால் உங்கள் மகளை நீங்களே கொச்சைப்படுத்துகிறீர்கள் என்று வாய் கிழிய வசனம் பேசுவார்கள் சில பொழுதுபோக்கு போராளிகள்.

 

ஆனால், அப்படி பேசுபவர்கள் அடிபட்டு நிற்கும் பெண்களுக்கு எந்த வகையிலும் உதவியாக இருக்க மாட்டார்கள். திருமணம் முடிந்த பிறகுதான் அவர் யார்..? என்ன கதை..? அவர்கள் வீடு எங்கிருக்கிறது..? அவர்களுடைய வாழ்க்கை முறை என்ன..? அவர்கள் உணவு முறை என்ன..? என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் தெரிய வரும், இதனால் பல பிரச்சினைகள் அந்த பெண்களுக்கு ஏற்படுகிறது.

எனவே கல்லூரி பெண்கள் பள்ளி மாணவிகள் காதல் விவகாரங்களில் கண்ணியத்துடன் இருப்பது நல்லது. காதலிக்கவே கூடாது என்பது அபத்தமாக இருக்கும். ஒரு பாலினத்தில் பிறந்தால்.. நிச்சயமாக எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு வர வேண்டும் என்பது இயற்கையின் விதி.

இயற்கைக்கு எதிராக இந்த சட்டத்தை போட்டாலும் அது வேலைக்கு ஆகாது. காதல் என்பது இயற்கை. அதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பே கிடையாது. ஆனால், அந்த காதல் எங்கு வரவேண்டும்..? எப்படி வரவேண்டும்..? என்பதற்கு சில வரைமுறைகள் இருக்கின்றன.

எப்படியான நபரை வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்ய வேண்டும் என்ற ஒரு வரைமுறை இருக்கிறது. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு பாலின ஈர்ப்பு என்ற ஒரே ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு வரும் காதலுக்கு பெயர் காதல் கிடையாது. அது ஒரு போகம்.. ஆம், அது வெறும் போகத்துக்கு தேடல் மட்டுமே தவிர வாழ்க்கை துணைக்கண தேடலாக இருக்க முடியாது.

காதல் என்பது உண்மை. அதைத்தாண்டி அன்பு.. அதைத் தாண்டிய உறவுகள்… அதைத் தாண்டிய வசதிவாய்ப்புகள்.. அதைத் தாண்டிய ஒழுக்கம்.. அதைத் தாண்டிய வாழ்க்கை வெறி… அதை தாண்டிய உணவு முறை.. என பல விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது இந்த காதல்.

இவை அனைத்தையும் காதலிக்கும் போதே உங்களால் அலச முடியும் ஆராய முடியும் என்றால் அந்த நபரை நிச்சயமாக காதலிக்கலாம் ஆனால் அவரை மட்டுமே பார்த்துக்கொண்டு.. எனக்கு நீ மட்டும் தான் வேண்டும்.. நீ மட்டும் என் அருகில் இருந்தால் போதும் போன்ற சினிமா வசனங்கள் வாழ்க்கைக்கு சுத்தமாக எடுபடாது.

நிச்சயமாக 0.1% கூட இது வேலைக்கு ஆகாது. எனவே ஒரு நபரை காதலிக்கும் முன்பு அவர் யார்..? அவருடைய குடும்பத்தின் பின்னணி என்ன..? அவர் எப்படியான வீட்டில் வசிக்கிறார்..? அவருடைய சுற்றத்தினர் யார்..? அவருடைய உறவினர்கள் யார்..?

அவருடைய வாழ்க்கை முறை எப்படியாக இருக்கிறது..? அந்த வாழ்க்கை முறையில் நம்மால் ஒன்றி வாழ முடியுமா..? அவருடைய வருமானம் எப்படி இருக்கிறது..? அவருடைய குடும்பத்தினரின் உணவு முறை எப்படி இருக்கிறது…?

 

அவர்கள் வாழ்க்கை வாழக்கூடிய வாழ்க்கை நெறி சரியானதாக இருக்கிறதா..? அந்த குடும்பத்தின் மீது அந்த ஊரில் வசிக்கக்கூடிய அவர்களின் மதிப்பு எப்படி இருக்கிறது..? இப்படியான பல விஷயங்களை அலசி ஆராய்ந்து ஒருவர் மீது காதல் வருகிறது அல்லது ஒருவர் மீது காதல் வந்துவிட்டது அதன் பிறகாவது இப்படியான விஷயங்களை ஆராய முடிகிறது என்றால் அந்த நபரை திருமணம் செய்து கொள்ளலாம்.

ஆனால் மூடு மந்திரமாக.. தலையும் புரியாமல்.. காலும் புரியாமல்.. அந்த நபர் தான் என் வாழ்க்கை முழுவதும் வாழவேண்டும் என்ற ஒரு கண்மூடித்தனமான சிந்தனை திருமணமாகி ஒரு இரவு கடந்த அடுத்த நொடியே சுக்கு நூறாக உடைந்து விடும்.

அந்த கண்மூடித்தனமான சிந்தனை ஒரே ஒரு இரவில் உடைந்து போய்விடும். இதனை இளம்பெண்கள் ஆத்மார்த்தமாக உணர்ந்து கொள்வது அவசியம். இதனை ஏற்றுக் கொள்ள தவறினால்…. நடிகை பேபி அஞ்சுவை போல வாழ்க்கை திக்குத் தெரியாமல் சின்னாபின்னமாகி நிற்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam