சுவையான பாதாம் அல்வா..! – வீட்டிலேயே செஞ்சு அசத்தலாம்..! – வாங்க பாக்கலாம்..!

அல்வாவை பிடிக்காத குழந்தைகளை இல்லை என்று கூறலாம். பொதுவாக அதிக அளவு கோதுமை அல்வா மஸ்கோத் அல்வா போன்றவற்றை கடையில் வாங்கித்தான் நாம் உண்கிறோம்.

எளிய முறையில் வீட்டிலேயே நாம்  பாதாமை பயன்படுத்தி சத்துமிகு பாதாம் அல்வா எப்படி செய்யலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பாதாம் அல்வா செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  1. பாதாம் பருப்பு 200 கிராம்
  2. சர்க்கரை 400 கிராம்
  3. ஏலக்காய் 4
  4. நெய் முக்கால் லிட்டர்
  5. குங்குமப்பூ சிறிதளவு

 செய்முறை

 பாதாம் அல்வா செய்வதற்கு பாதாம் பருப்பை ஒரு நாள் முன்னரே சுடு நீரில் ஊற வைக்க வேண்டும். ஒரு நாள் நன்கு ஊறிய பாதாம் பருப்பிலிருந்து பாதாம் தோலை நீக்கி விட வேண்டும்.இது நன்கு ஊறி இருந்தால் மட்டும்தான் அதன் தோல் விரைவில் வெளிவரும்.

 இனி தோலை நீக்கி வைத்திருக்கும் பாதாம் பருப்பை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்த இந்த விழுவினை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு நெய்யை விட்டு சுடு ஏற்றவும். நெய் உருகிய பிறகு அரைத்து வைத்திருக்கும் பாதாம் கலவையை அதில் போட்டு விட்டு சர்க்கரையை சேர்த்து இளம் சூட்டில் நன்கு கிளறவும்.

 சர்க்கரை நன்கு உருகி பாதாம் கலவையோடு ஒன்றாக இணையும் சமயத்தில் கால் பங்கு நெய்யை ஊற்றி கிளற வேண்டும். சுமார் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் இவ்வாறு கிளறிக்கொண்டே இருந்து பின் மீதி இருக்கும் கால் பங்கு நெய்யை ஊற்றி மீண்டும் கிளரவும்.

 அடுப்பினை மிதமான சூட்டில் வைத்துக் கொண்டு ஐந்து நிமிடம் தொடர்ந்து கிளறிய பிறகு மீதி இருக்கும் நெய்யை முழுதாக கொட்டி நன்கு கிளறி விடவும்.

 கையில் ஒட்டாத பதத்திற்கு பாதாம் வந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும் பின்னர் நான்கு ஏலக்காயை பொடித்து அப்படியே அதன் மேல் தூவி விடவும். கூடவே எடுத்து வைத்திருக்கும் குங்குமப்பூவையும் ஆங்காங்கே தூவி விட்டால் சூடான சுவையான பாதாம் அல்வா ரெடி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version