அம்மாடியோவ்.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்ளோ தெரியுமா..? இதோ பட்டியல்..!

சின்னத்திரை தொலைக்காட்சிகளை பொருத்தவரை சீரியல் தொடர்பான போட்டி என்பது மூன்று சேனல்களிடம்தான் பெரிதாக நடந்து வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய மூன்று நிறுவனங்கள் அதில் போட்டி போட்டு வருகின்றன.

டி.ஆர்.பி யில் எந்த சேனலின் நாடகம் அதிகமான பார்வையாளர்களை பிடிக்கிறது என்பதுதான் பெரும் போட்டியாக இருக்கிறது. இதற்காக இந்த மூன்று சேனல்களுமே தொடர்ந்து பல வித யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

இருந்தாலும் விஜய் டிவிக்கு இருக்கும் அளவிற்கான வரவேற்பு என்பது மற்ற சேனல்களுக்கு குறைவாகவே இருந்து வருகிறது. ஆரம்பத்தில் சீரியல் என்றாலே பிரபலமான சேனலாக சன் டி.வி தான் இருந்து வந்தது. ஆனால் வெகு சீக்கிரத்திலேயே விஜய் டிவி அந்த இடத்தை பிடித்தது.

போட்டி போடும் தொலைக்காட்சிகள்:

அதற்கு முன்பு சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலமாகதான் வரவேற்பு பெற்று வந்தது விஜய் டிவி. தாமதமாகதான் குடும்ப சீரியல்களை ஒளிபரப்ப துவங்கியது. ஆனால் அதிலும் தற்சமயம் பெரிதாக வளர்ந்து வந்துள்ளது விஜய் டிவி.

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்கள் வரிசையில் முக்கியமான சீரியல்தான் பாக்கியலட்சுமி. பல வருடங்களாக இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

நடிகர் நடிகையர் சம்பளம்:

விறுவிறுப்பான திருப்புங்களுடன் தொடர்ந்து கதையில் ஏதாவது ஒரு மாற்றத்தை நிகழ்த்தி இந்த சீரியலை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் இவ்வளவு வருடமாக நடிக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் என்பது பெரிதாக வெளிவராத விஷயமாகவே இருந்து வருகிறது.

தற்சமயம் அது குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளன இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான பாக்யாவாக நடிக்கும் சுசித்ராவிற்கு ஒருநாள் சம்பளமாக 15000 கொடுக்கப்படுகிறதாம். இந்த சீரியலில் நடிப்பவர்களிலேயே அதிகம் சம்பளம் வாங்குபவர் சுசித்ராதான்.

அவரை தொடர்ந்து கோபியாக நடிக்கும் நடிகர் சதீஷ் 12,000 சம்பளமாக வாங்குகிறார். ராதிகாவாக நடிக்கும் நடிகை ரேஷ்மா 12000 சம்பளமாக வாங்குகிறார். தொடர்ந்து செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷால் 10,000.

ஜெனி ரோலில் நடிக்கும் திவ்யா கணேஷ் 10,000 வாங்குகிறார் இனியா ரோலில் நடித்துவரும் நேகா தான் இந்த சீரியலில் குறைவான அளவில் ரூ. 8000 ரூபாயை ஒருநாள் சம்பளமாக வாங்குகிறார். இதனைத் தொடர்ந்து பலர் ஒரு மாதம் உழைத்து வாங்கும் சம்பளத்தை ஒரே நாட்களில் இந்த பிரபலங்கள் வாங்குகிறார்கள் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version