என்ன கன்றாவி இது..? இதுக்கு பேரு பிரியாணியா..? மாதம்பட்டி ரங்கராஜ் சமையலை விளாசிய பிரபல நடிகர்..!

சமையல் துறையில் ஆண்களுக்கு என்று ஒரு சிறப்பான இடம் உள்ளது. அந்த வகையில் மிகச்சிறந்த சமையலை கூட நளபாகம் என்று தான் கூறுவார்கள். அந்த அளவுக்கு நளன் ஒரு மிகச்சிறந்த சமையல் செய்யக்கூடிய கலைஞராக இருந்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது மாதம்பட்டியை சேர்ந்த ரங்கராஜ் என்பவர் சமையல் துறையில் சிறப்பாக பணி புரிந்து வருவதோடு மாதம்பட்டி ரங்கராஜ் மிகச்சிறந்த நடிகராகவும் திகழ்கிறார். இவர் திரில்லர் திரைப்படமான பென்குயின் திரைப்படத்தில் 2020 ஆம் ஆண்டு நடித்து அனைவரையும் அசத்தினார்.

இதுக்கு பேரு பிரியாணியா..

இந்நிலையில் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளி வந்த மகராஜா திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இந்த வெற்றியை கொண்டாட விருந்து வைத்து கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள்.

அப்படி அவர்கள் முடிவு செய்ததை அடுத்து மாதம்பட்டி ரங்கராஜிடம் பொறுப்பினை கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே தனது குடும்பத் தொழிலான சமையல் தொழிலை சிறப்பான முறையில் செய்து வரும் இவர் நடிகர் கார்த்தியின் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் உணவு சேவையை வழங்கி இருக்கிறார்.

இவர் சமைக்கின்ற உணவில் பொய்யா சட்னி என்பது மிகவும் ஃபேமஸான டிஷ் ஆக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை அள்ளி வருகிறது.

என்ன கண்றாவி இது..

இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் பத்திரிகையாளர்களுக்கு வெற்றி விழா உடன் சேர்த்து விருந்து வைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.

அந்த விருந்திற்கு திடீரென சமீபத்தில் ட்ரெண்டான சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களுடைய சமையலை தேர்ந்தெடுத்திருக்கிறார். மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் தான் அந்த சமையலை செய்து இருக்கிறார்.

ஆனால், அந்த உணவை சாப்பிட்ட பத்திரிக்கையாளர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஏனெனில் பிரியாணி என்ற பெயரில் எதையோ ஒன்றை சாப்பிட கொடுத்து விட்டு இது தான் பிரியாணி என கூறியிருக்கிறார்கள்.

மேலும் இட்லி தோசைக்கு சாம்பார் சட்னி கூட வைக்காமல் வெறும் பொடியையும், நெய்யையும் மட்டும் கொடுத்திருக்கிறார்கள். வெறும் 200 பேர் மட்டுமே பங்கேற்ற அந்த விழாவில் முறையான சாப்பாடு வசதி கிடையாது.

மாதம்பட்டி ரங்கராஜை விலாசிய பிரபலம்..

அத்துடன் முதல் பந்தியில் சாப்பிட்டவர்கள் சாப்பாடு சரியில்லை என்பது கூறியதும் பாதி பேர் கிளம்பி விட்டார்கள். அப்படி இருந்தும் நிறைய பேருக்கு சாப்பாடு போதுமானதாக இல்லை.

200 பேருக்கு சாப்பாடு சொன்னால் 100 பேருக்கு தான் சமைப்பீர்களா மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களே..?

நீங்கள் வைத்ததற்கு பெயர் பிரியாணியா என்று கடுமையான கேள்வி எழுப்பி இருக்கிறார் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்.

மேலும் விஜய் சேதுபதியே இவருடைய பிரியாணியை பார்த்துவிட்டு இதுக்கு பேரு பிரியாணியா என்று கோபப்பட்டதாகவும்.. மாதம்பட்டி ரங்கராஜின் உண்மை முகம் தெரிந்து விட்டது எனவும் பதிவு செய்து இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

இந்த விஷயமானதை இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் மாதம்பட்டி ரங்கராஜன் நிலமையை எண்ணி அனைவரும் வருத்தப்பட்டு வருகிறார்கள். மிகவும் சிறப்பான சமையல் நிபுணர் என்ற பெயர் பெற்றிருக்கக் கூடிய இவர் எப்படி இந்த சமையல் நிகழ்வில் சொதப்பினார் என்று ரசிகர்கள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version