ஜெயம் ரவி ஆர்த்தி DIVORCE..! மாமியார் போட்ட கண்டிஷன்..! மல்லுக்கட்டிய ஜெயம் ரவி..!

கடந்த சில காலங்களாகவே தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து குறித்த பிரச்சனைதான் வெகுவாக பேசப்பட்டு வருகிறது. ஆர்த்தியும் ஜெயம் ரவியும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இதனை அடுத்து இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்து வருகின்றனர் தமிழ் சினிமாவில் பெரிதாக பெண்கள் குறித்து கிசுகிசுப்புகள் இல்லாத ஒரு நபராக ஜெயம் ரவி இருந்து வருகிறார்.

ஆரம்ப காலகட்டங்களில் நிறைய நடிகைகளுடன் சேர்ந்து நடித்த போதும் கூட மிகவும் ஜெனியூனான ஒரு நடிகர் என்று ஜெயம் ரவி பெயர் வாங்கியவர் இந்த நிலையில் அவருக்கே விவாகரத்து என்பதுதான் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

பிரபலங்களின் விவாகரத்து:

இதற்கு முன்பு ஏற்கனவே நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோரின் விவாகரத்து குறித்து கேள்விப்பட்டு மக்கள் பெரும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்த நிலையில் ஜெயம் ரவியும் இந்த வரிசையில் வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இதற்கு பல வித காரணங்கள் கூறப்பட்டாலும் நம்பும்படியான ஒரு காரணத்தை பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டிகள் கூறியிருக்கிறார். அவர் கூறும் பொழுது ஆர்த்தியின் தாயாரான சுஜாதா விஜயகுமார் ஒரு பிரபலமான தயாரிப்பாளர் ஆவார்.

அவர் நிறைய திரைப்படங்களையும் சின்னத்திரை நாடகங்களையும் தயாரித்திருக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த நிறைய திரைப்படங்களை அவர் தான் தயாரித்திருக்கிறார். இந்த நிலையில் அவர் கமிஷன் விஷயங்களில் கொஞ்சம் கண்டிப்பாக இருப்பதால் திரைத்துறையில் பலருக்கும் அவரை பிடிக்காது.

பயில்வான் ரங்கநாதன் கருத்து:

அதனால்தான் நிறைய தவறான வதந்திகளை  ஜெயம் ரவி குறித்து அவர்கள் பரப்பி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த சைரன் திரைப்படத்தைக் கூட சுஜாதா விஜயகுமார்தான் தயாரித்திருந்தார்.

ஆனால் சமீபகாலமாக ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பதே இல்லை. இந்த நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் ஒரு திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிப்பதாக இருந்தது.

ஆனால் அந்த திரைப்படத்திற்காக 25 கோடி சம்பளமாக கேட்டிருக்கிறார் ஜெயம் ரவி. ஆனால் அவருக்கு மார்க்கெட் என்பதே இல்லாத பொழுது அவ்வளவு சம்பளம் தர முடியாது என்று நினைத்திருக்கிறார் சுஜாதா விஜயகுமார்.

ஆனால் தனது மாப்பிள்ளை என்பதால் அதை நேரடியாக அவரிடம் கூற முடியாத காரணத்தினால் இயக்குனர் பாண்டிராஜிடம் படத்தின் பட்ஜெட்டை குறைத்துக் கொள்ள முடியுமா என்று கேட்டிருக்கிறார். ஆனால் பாண்டிராஜ்க்கு அதில் விருப்பமில்லாத காரணத்தினால் வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் திரும்ப கொடுத்துவிட்டு விஜய் சேதுபதியை வைத்து அந்த திரைப்படத்தை இயக்க சென்று விட்டார்.

இதனால் வருத்தமடைந்த அடைந்த ஜெயம் ரவி அப்போதிலிருந்து சுஜாதா விஜயகுமாருடன் கருத்து வேறுபாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனால் ஆர்த்திக்கும் ஜெயம் ரவிக்கும் இடையேயும் சண்டைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் ஆர்த்தி, ஜெயம் ரவி தொடர்பான பதிவுகளை எல்லாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறார். இது உண்மையிலேயே இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கிறது ஆரம்பத்தில் தனுஷின் மனைவியும் இதேதான் செய்தார் என்று கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version