கமலை துரத்தி விட்ட விஜய் டிவி..? பிரபல நடிகர் வெளியிட்ட உண்மை..! பிக்பாஸில் இருந்து வெளியேற இது தான் காரணமா..?

விஜய் டிவியில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் கொண்ட நிகழ்ச்சிகளில் பிரபலமான நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியும் இருந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பம் முதலே கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதனாலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன்தான் நடத்தி வருகிறார் என்று ஒரு பக்கம் நம்பப்பட்டு வருகிறது. ஆனால் விஜய் டிவி தான் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதை தொகுத்து மட்டுமே வழங்கி வந்தார் கமல்ஹாசன்.

பிக்பாஸ் நிகழ்ச்சி:

இதற்காகவே அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டது. இந்த 100 நாட்கள் நடக்கும் பிக்பாஸில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களுக்கு மட்டும் கமல்ஹாசன் வந்து சில அறிவுரைகளையும் முடிவுகளையும் போட்டியாளர்களுக்கு வழங்கிவிட்டு செல்வது வழக்கமாக இருந்து வந்தது.

சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களுக்கான எபிசோடுகளும் ஒரே நாளில் படம் பிடிக்கப்படும் என்றும் இது குறித்து பேச்சுக்கள் இருக்கின்றன. இதற்கு கோடி கணக்கில் வருமானம் வருவதால் கமல்ஹாசனும் தொடர்ந்து பிக் பாஸில் கலந்து கொண்டு வந்தார். ஏனெனில் அப்போதைய காலகட்டத்தில் கமல்ஹாசனுக்கு அதிகமாக பட வாய்ப்புகள் என்பது இல்லை.

ஆனால் கமல்ஹாசன் கூறும் முடிவுகள் தொடர்பாக தொடர் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார். நிறைய முறை அதிகமாக அவரை எதிர்மறையாக விமர்சனம் செய்தும் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வருடம் வெளியாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 8ல் கமல் கலந்து கொள்ளவில்லை என்று அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

கமல் விலக காரணம்:

இது குறித்து பயில்வான் ரங்கநாதன் சில தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது தமிழ் சினிமாவில் கமலஹாசன் எப்போதுமே புதுமையாக ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்.

அதனால்தான் அவர் இப்பொழுது பிக் பாஸ் விட்டு விலகி இருக்கிறார் போன முறை பிக்பாஸில் கலந்து கொண்ட பொழுது அதுதான் அவருடைய கடைசி பிக் பாஸ் என்று கூறியிருந்தார். தற்சமயம் டி.ஐ எனப்படும் தொழில் நுட்பத்தை கற்றுக் கொள்வதற்காக வெளிநாடு செல்ல இருக்கிறார் கமல்ஹாசன்.

அதனால்தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை வெளிநாடு போக இருக்கிற அவரை கூப்பிட்டு அவர்கள் ஷோ நடத்த முடியாது அல்லவா? அதை போல சிலர் கூறும் பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் சம்பளம் குறைவாக இருப்பதால் கமல் சென்றதாக கூறுகின்றனர். ஆனால் சம்பளம் எல்லாம் ஒரு விஷயமே கிடையாது கமல் புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே விஜய் டிவியில் இருந்து விலகி இருக்கிறார் என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

மேலும் அடுத்து இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பே விஜய் சேதுபதி சன் டிவியில் மாஸ்டர் குக் என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version