அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!

தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், போனாலும் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கான இடத்தை யாராலும் நெருங்க கூட முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஏனெனில் கவர்ச்சி நடிகையாக மட்டுமே இல்லாமல், ரசிகர்களை ஒருவிதமான தனது வசீகரத்தால், அவர்களது மனங்களை கட்டி போட்டவர்தான் நடிகை சில்க் ஸ்மிதா.

சில்க் ஸ்மிதா

ஆந்திராவில் இருந்து வந்த விஜயலட்சுமியை தனது வண்டிச்சக்கரம் என்ற படத்தில் சில்க் என்ற கேரக்டரில் நடிக்க வைத்தார் நடிகர் வினுசக்கரவர்த்தி. அவர்தான் அந்த படத்தின் இயக்குனர். அந்த படத்தில் நடித்த கேரக்டரே, பின்னாளில் சில்க் ஸ்மிதா என்று அவரது பெயராக மாறியது.

கடந்த 1980 முதல் 1990 துவக்கம் வரை சில்க் ஸ்மிதாதான் தமிழ் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாக கொடி கட்டி பறந்தார். இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவுண்டமணி – செந்தில் போல, அந்த காலகட்டத்தில் ஒரு படத்தின் வெற்றியை, அதன் வருமானத்தை தீர்மானிக்கும் இடத்தில், கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா இருந்தார் என்றால், அதுதான் உண்மை.

பாடல் காட்சியில்…

ஏனெனில் எப்படியாவது தங்களது படத்தில் ஒரு பாடல் காட்சியில், சில்க் ஸ்மிதா நடனம் இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டும் அளவுக்கு, சில்க் ஸ்மிதாவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது.

ஆனால் அலைகள் ஓய்வதில்லை, சூரக்கோட்டை சிங்கக்குட்டி போன்ற சில படங்களில், சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சில்க் ஸ்மிதாவை பலரும் பாராட்டினர். ஆனால் பெரும்பாலான இயக்குனர்கள், கவர்ச்சி நாயகியாகவே அவரை பயன்படுத்தினர்.

இதையும் படியுங்கள்: நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

நிறைவேறாத ஆசை

இந்நிலையில் திருமண வாழ்க்கை, குடும்பம், கணவர், குழந்தைகள் என சந்தோஷமான ஒரு இல்லற வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார் சில்க் ஸ்மிதா. அவரது அந்த கனவு, ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போய்விட்டது.

கடந்த 1995 ஆம் ஆண்டில், நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது மறைவில் இன்னும் மர்மம் இருக்கிறது என்பதே உண்மை.

டாக்டர் கட்டுப்பாட்டில்…

ஏனெனில் அவரது கடைசி காலகட்டத்தில், டாக்டர் ஒருவரின் கட்டுப்பாட்டில் அவர் இருந்தார். ராதாகிருஷ்ணன் என்ற டாக்டர், அவரை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார் என்பதால் அவரது மறைவில் பல்வேறு சந்தேகங்களும் மர்மங்களும் நீடிக்கின்றன.

பயில்வான் ரங்கநாதன்

இந்நிலையில் பத்திரிக்கையாளர் மற்றும் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, சில்க் ஸ்மிதாவுக்கு போதைப்பழக்கம் இருந்தது. பல்வேறு விதமான போதை பழக்கத்திற்கு அவர் அடிமையாக இருந்தார்.

இதையும் படியுங்கள்: “இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

போதை ஊசி போட்டுக்கொண்டு…

ஷூட்டிங்கில் நடிக்க வரும்போதுகூட, அவர் போதை ஊசி போட்டுக் கொண்டுதான் வருவார். அந்த போதையில்தான் நடிப்பார் என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் வெளியிட்டுள்ளார். இது சில்க் ஸ்மிதா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version